வியாபரத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் வருவது தவிர்க்க இயலாது. ஆனால், அந்தப் பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறார்கள்
என்பதே வியாபாரத்தில் ஒருவரின் வெற்றி, தோல்வி என்பதைத் தீர்மானிக்கிறது. இது தொடர்பான எனது சமீபத்திய அனுபவம் இங்கே.
ஒரு பெரிய அலுவலக விருந்துக்கு இந்திய உணவுவகைகளை ஆர்டர் செய்வது தொடர்பாக இங்கிருக்கும் இரண்டு இந்திய உணவக உரிமையாளர்களிடம் நேரடியான தொடர்பில் இருந்தேன். அவர்கள் இருவரும் இந்தியாவின் ஒரே மாநிலத்தைத் சேர்ந்தவர்கள். துரதிஷ்டவசமாக சொல்லி வைத்தார்போல் இருவருக்கும் ஒரு இக்கட்டானச் சூழல் ஏற்ப்பட்டது. அதை இருவரும் கையாண்ட விதம் நேர் எதிரானது. அந்த இரண்டு நிகழ்வுகள் உங்களுக்காக.
நிகழ்வு#1 ;
முதலாமவரை நான் நேரில் அவருடைய உணவகத்தில் சந்தித்து ஆர்டர் தொடர்பாக பேசினேன். ஆரம்பம் முதலே அவருடைய பேரத்திலும், பேச்சிலும் கரார் தன்மை இருந்தது. தனது சரக்கு தரத்தால் உயர்ந்தது அதனால் விலை சற்று அதிகம்தான் எனவாதிட்டுப் பேசினார். அவருடைய அனுகுமுறையில் வெளிப்படைத் தன்மையும் இருந்தது. தலைக்கு இத்தனை
டாலர் ($) எனத் தெளிவாக சொல்லிவிட்டார். அந்த உணவகத்தின் தரம் எனக்குத் தெரியும் என்பதால் அதிக பேரமின்றி ஒரு குறிப்பிட்டத் தொகையைப் பேசி இறுதிசெய்தேன்.
விருந்துக்கு 4 நாட்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை அந்த உணவகத்தில் இருந்து போன் வருகிறது. என்னால் அந்தப் போனை எடுக்கமுடியவில்லை. நான் திரும்ப இரவில் அந்த உணவக எண்ணுக்கு
அழைத்தபோது நேரடியாக வாய்ஸ் மெசேஜிக்குச் சென்றது. அந்த வாய்ஸ் மெசேஜ் செய்தி எனக்கு உண்மையில் ஒரு அதிர்ச்சி தான்.
அந்த வாய்ஸ் மெசேஜ் அதிர்ச்சி செய்தி- "உணவகத்தின் சமயலறையில் எதிர்பாராமல் ஏற்பட்ட தீவிபத்தால் பராமரிப்பிற்காக உணவகம் வரும் 3 வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும்" என்பதுதான்.
நான் வேறு வழியில்லாமல் வேறு நபர்களைத் தேட வேண்டியக் கட்டாயத்தில் இருந்தேன். அடுத்த நாள் திங்கள் கிழமை காலை அலுவலக எண்ணிற்கு
அந்த உரிமையாளர் அழைத்திருந்தார். தீவிபத்து விசயத்தை நேரடியாக சொன்னவர். மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 'உங்களுக்கு விருப்பமிருந்தால்
வேறு ஆளை ஏற்பாடு செய்ய இயலும்' என்றார். அவர் சொன்ன உணவகத்திற்கு நல்ல பெயர் இல்லாததால், நான் மறுத்தேன். அவர் மறுபடியும் 'ஐ ம் எக்ஸ்டீமிலி சாரி. மை அப்பாலஜிஸ்' என மனதார பேசினார். அடுத்த முறை தேவைப்படும் போது கண்டிப்பாக தொடர்புகொள்ளச் சொன்னார். சுபம்.
நிகழ்வு#2 ஐ நாளை பதிவிடுவேன்.
நிகழ்வு#2 ஐ நாளை பதிவிடுவேன்.