Sunday, March 20, 2022

இளையராஜாவுக்குக் கிடைக்காத அந்த வாய்ப்பு

இசை என்றால் இளையராஜா எனப் பேசப்பட்டாலும்  அவருடைய தமிழ் மொழி ஆளுமை என்பது வெளியில் பெரிதாக பேசப்படாத ஒன்றாக இருக்கிறது என்கிறார் கவிஞரும் பாடலாசிரியருமான யுகபாரதி (புத்தகம்; இசை அல்லது இளையராஜா-யுகபாரதி ).


அதாவது, புலவர்களே எழுத அஞ்சும் பல வெண்பாக்களை இளையராஜா  தளை,சீர் தட்டாமல் எழுதி பல புத்தகங்களாக வெளியிட்டு இருக்கிறார். பாடலுக்கு இசையமைக்கும் போதே பெரும்பாலும் பொருத்தமான சுண்டியிழுக்கும் முதல் அடியையும் சேர்த்து எழுதி விடுவார். செந்தமிழ் பாடல் வரிகளை வெகுஜன மக்களின் இரசனைக்கு ஏற்றாற் போல வழக்குமொழிக்கு மாற்றி எளிமைப்படுத்தி இருக்கிறார் என நீண்ட பட்டியல் இட்டிருக்கிறார்.

கூடவே,  புத்தகத்தில் அவர் அங்கலாய்த்து சொல்லும் ஒரு விசயம்.  இன்று ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகமும் எழுந்து நிற்கும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கோ செம்மொழிப் பாடலுக்கோ அவர் (ராஜா) இசையமைக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம் என்றும் அந்த வாய்ப்பை காலமோ அரசியலோ அவருக்கு  வழங்கியிருக்கலாம் என்கிறார் யுகபாரதி. 

அது போலோரு வாய்ப்பு இளையராஜாவுக்கு இனியேனும் அமையுமா எனத் தெரியவில்லை.

Book Reference. ISAI ALLADHU ILAYARAAJA (Tamil Edition by Yuga Barathi). Kindle Edition. 

Thursday, March 10, 2022

செந்தமிழ் நாடெனும் போதினிலே..

செந்தமிழ் நாடெனும் போதினிலே  பாடலை எழுதியது மகாகவி பாரதியார் என்பது  பலருக்குத் தெரியும்.  ஆனால், அந்தப் பாடல் பிறந்த கதை  நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தப் புகழ்பெற்ற பாடல் ஒரு போட்டிக்காக பாரதியால்  எழுதப்பட்டிருக்கிறது.  ஆமாம், அந்த நாளில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தவர் பாண்டித்துரைத் தேவர் எனும் பெருமகனார். அவர் ஒரு போட்டி ஒன்றை நடத்தி இருக்கிறார்.




அதன்படி, தமிழ்நாட்டைப் பற்றிச் சுருக்கமாக எல்லோரும் பாடக்கூடிய மெட்டில் பாட்டு எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகிறோம் என அறிவித்திருக்கிறார்.

அந்தப் போட்டியில் பாரதியைக் கலந்து கொள்ளும்படி பாரதிதாசனும், இன்னும் சிலரும் அவரை வற்புறுத்தி வேண்டியிருக்கிறார்கள். அதற்காக எழுதப்பட்ட பாடல்தான் நாம் இன்று இன்புற்று பாடி மகிழும்செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற அந்தப்பாடல்.

ஆதாரம்-பாரதிதாசனோடு 10 ஆண்டுகள்- ஈரோடு தமிழன்பன் (விழிகள் பதிப்பகம்)



























































































































































































ம் என அறிவித்திருக்கிறார்.

அந்தப் போட்டியில் பாரதியைக் கலந்துகொள்ளும்படி பாரதிதாசனும் இன்னும் சிலரும் வற்புறுத்தி ஒரு பாடல் எழுத வேண்டி இருக்கிறார்கள். அப்படி எழுதப்பட்டதுதான் நாம் இன்று பாடி இன்புறும் செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடல்.

ஆதாரம் - பாரதிதாசனோடு 10ஆண்டுகள் ஈரோடு தமிழன்பன் (விழிகள் பதிப்பகம்)