Friday, January 27, 2023
ஜெஸிகா கிங் - சேஸிங்
Thursday, January 26, 2023
ஜெஸி - நூல் வெளியீட்டு விழா
ஜெஸி நூல் வெளியீட்டு விழா ஜனவரி,16, 2023 (திங்கள்) அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. சிறப்பு விருந்தினர் கோவை சதாசிவம் அவர்களுடைய தாயார் காலமாகிவிட்டதால் அவரால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால், அந்தக் குறை தெரியாத வகையில் நிகழ்ச்சி நிரலில் கடைசி நிமிட மாற்றங்கள் செய்து நண்பர் தமிழ்மணி மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். கூடவே தமிழ்பரதனும் இணைந்து கொள்ள விழா களைகட்டியது.
முனைவர் சந்தான லட்சுமி நூல் குறித்த விரிவான திறனாய்வை தந்தார். அவருடைய பல கோணங்கள் எனக்கு வியப்பளித்தன. அதுபோல, கலைபாரதி பங்களா கொட்டா நாவல் குறித்து மிகவும் சிலாகித்து பேசினார். அதை எழுதி 6-7 ஆண்டுகள் ஆனதால் எனக்கே மறந்துவிட்ட பலவற்றை அவர் நினைவூட்டி சிறப்பாக பேசினார்.
வழக்கம்போல பேராசிரியர் ஹாஜா கனி தன் பேச்சால் அரங்கைக் கட்டிப்போட்டார்.
விழாவுக்கு வந்திருந்த மருத்துவர் திருநாவுக்கரசு அவர்களை எந்த வித முன்னேற்பாடுமின்றி வாழ்த்துரை வழங்க அழைத்தோம். அவரும் இசைந்து சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கினார்.
வேலை நெருக்கடியில் ஓடிக்கொண்டிருப்பதால் நிகழ்வின் எல்லா படங்களையும் காணொளிகளையும் உடனடியாக பகிர முடியவில்லை. இருக்கும் சில படங்களை மட்டும் இப்போது பகிர்கிறேன்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கும், உள்பெட்டியிலும், தொலைபேசியிலும் தொடர்ச்சியாக அழைத்து வாழ்த்து சொன்ன அன்பு உள்ளங்களுக்கு நன்றி !