Sunday, September 17, 2023

ஜெஸிகா கிங் - குறித்து (9) -யதார்த்தமாக இருந்தது

 முகநூல் வாசகர் Raji Athappan "ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்" நாவல் குறித்து பகிர்ந்தது..




பிரதிக்கு :

Zero degree publication 98400 65000
முதல் பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ 330.

Saturday, September 9, 2023

2023-ஸீரோ டிகிரி சிறுகதைப் போட்டியில் பரிசு

ஒரு மகிழ்ச்சியான செய்தி!  

2023-ஸீரோ டிகிரி சிறுகதைப் போட்டி-இல் என்னுடைய 'அம்மாவின் பிடிவாதம் சிறுகதை தேர்வாகி இருக்கிறது.


கடந்த ஆண்டு
பெட்னா (வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு) நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது 'மழித்தலும் நீட்டலும்’ கதை பரிசு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு இரண்டாவது கதையும் தேர்வாகி இருப்பது உற்சாகமளிக்கிறது.

ஸீரோ டிகிரி பதிப்புக் குழுமத்திற்கும் , நடுவர்களுக்கும் நன்றி சொல்லும் இந்த நேரத்தில் தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் வாசக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி !!

இதன் இரகசியம்தான் என்ன ? என நண்பர்கள் கேட்கும் முன் நானே சொல்லிவிடுகிறேன். இதில் பெரிய இரகசியமெல்லாம் இல்லை. நான் முன்பே எழுதி வைத்த கதைகளைப் போட்டிக்கு அனுப்புகிறேனே தவிர. போட்டிக்காக தனியாக கதைகளை எழுதுவதில்லை.

இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேனே. இந்த இரண்டு கதைகளும் அமெரிக்கக் கதைக்களத்தை மையப்படுத்தியது என்பதைத் தாண்டி இரண்டுக்கும் இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது. அதைக் கதைகள் நூலாக வரும்போது வாங்கி வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.