2024-ஆம் ஆண்டை வழியனுப்பி, திரும்பிப் பார்க்கும் இந்த நேரத்தில் வலை நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
கடந்த ஆறு மாதங்களாக நான் வகுப்பில் "உள்ளேன் ஐயா" சொல்லிக்கொண்டிருக்கிறேன் நண்பர்களே. ஆமாம்... அமெரிக்க மண்ணில் அமெரிக்கர்களோடு இணைந்து பயில வேண்டும் எனும் இலட்சியக் கனவு நனவாகி இருக்கிறது.
அமெரிக்கக் கல்லூரியில் எம்பிஏ (MBA) எனும் தொழில் நிா்வாக முதுநிலைப் பட்டத்தை வார இறுதி வகுப்பாக படித்துக் கொண்டிருக்கிறேன்.
என்ன ஒரு குறை? கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. அதனால் என்ன? வீட்டின் அடுத்த தலைமுறை கல்லூரிக்குள் நுழையும் முன்பு இதை செய்த முடிந்ததே என நினைத்துக் கொள்கிறேன். மனதுக்கும், படிப்புக்கும் வயதில்லை தானே.
பல புதிய நம்பிக்கைகளுடன் 2025-ஐ நோக்கி பயணிப்போம். நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !