தேவதைகள் பூமியில் இருக்குமா ?, தெரியவில்லை
இருந்தாலும் ,வீட்டில் வாழுமா ?, தெரியவில்லை
வாழ்ந்தாலும், பாடுமா?, தெரியவில்லை
பாடினாலும், ஆடுமா?, தெரியவில்லை
என் வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறாள்,
பாடுகிறாள்,
பாடிக்கொண்டே ஆடுகிறாள்!
என குழந்தைகள் இருக்கும் வீடு அத்துணை மகிழ்ச்சி நிரம்பியது. அதிலும்,
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.
ஏதோ ஒரு தருணத்தில், கண்டிப்பாக யாரோ ஓரு குழந்தை உங்களை 'அட' என ஆச்சரியப்பட வைத்திருக்கும். அது உங்கள் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆவது இயல்பு.
அது குழந்தை உங்களை அம்மா, அப்பா என விளித்ததாகவோ அல்லது தவழ்ந்த குழந்தை நடக்க தொடங்கியதோ அல்லது வேறு எதுவாயினும் இருக்கலாம்.
அதே குழந்தைகளிடம் தான் சில சமயங்களில் ஏனோ தானோ என பேசி மாட்டிக் கொண்ட அனுபவங்களும் இருந்திருக்கலாம். அப்படி நான் 'னே' என முழித்த சம்பவத்தை பார்ப்போம்.
நேற்று என்னுடய இரண்டு வயது இளையமகளை தூங்க வைக்கும் முயற்சியில் இருந்தேன் (முயற்சி மட்டுமே), ;) அவளை தூங்க வைக்கிறேன் பேர்வழின்னு நான் மட்டும் சில நாள் தூங்கிய அனுபவங்களும் உண்டு. பாப்பாவை தட்டி கொடுத்துட்டு இருக்கிறப்போ, திடீர்னு வெளியே பிளைன் போற சத்தம் கேட்டது. இது ஏன்டா உள்நாட்டு சதி போல இருக்கேன்னு நினைச்சப்போ, வழக்கம் போல "அது என்ன? " அப்படின்னா.
நான் "ஏரோபிளேன்" அப்படினு சொல்லி விடாம, கூடவே உனக்கு ஒன்னு வாங்கி தரட்டுமான்னு கேட்டேன். என்னுடய ஜாதகத்துல அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரியவேயீல்லங்க.. ஏங்க, நிலாவ புடிச்சு தரன்னு சொல்றப்ப, ஏரோபிளேன் வாங்கிதரன்னு சொல்லக்கூடாதங்க !? :)
அவ திரும்ப சொன்ன பதில் இருக்கே.. "ஒன்னு வேணாம் அப்பா, இரண்டா வாங்கலாம்". என வெள்ளந்தியா சொன்னதும் கன்னத்தில் பளார்னு அடிச்சது போல இருந்தது.
வேற என்ன பேச்சு அப்புறம். விமானம் கடந்த பின் வெளியே பூரண அமைதி, நான் இரவின் ஒளியில் முகத்தை தலையணையில் புதைத்தேன்.
Thursday, October 30, 2014
Sunday, October 5, 2014
நூல் வெளியீட்டு விழா
இன்றோடு சரியாக இரண்டு வாரம் ஆகின்றன அந்த விழா நடந்து.
ஆம், திருவாரூர் படைப்பாளர் கூட்டமைப்பின் சார்பில், திருவாரூரில் என் கவிதை நூல் "என் ஜன்னல் வழிப் பார்வையில்" வெளியீட்டு விழா 21 செப்டம்பர், 2014 ஞாயிற்றுக்கிழமை மாலை இனிதே நடைபெற்றது.
இது என் முதல் நூல் வெளியீட்டு விழா, எதுலும் முதல் என்பது தனித்துவம், தனிச் சிறப்பு உடையது. அதனால் தான் அது முதல் ;).
முதல் குழந்தையை, முதல் தடவை கையில் சுமப்பது போல அது ஒரு சுகானுபவம். மாமங்கம் பல ஆனாலும் மறக்க இயலாதது.
இளையராஜாவின் இசை வாரிசுகளான மூவரும் மெல்லிசைக் கச்சேரி மூலம் திருவாரூரில் இருந்துதான் தங்கள் இசை பயணத்தை தொடங்கினார்கள்.
சங்கீத மூம்மூர்த்திகள் பிறந்த ஊர், முன்னாள் முதல்வரின் ஊர் என திருவாருரின் சிறப்புகள் கணக்கில் அடங்கா.
இது மட்டுமின்றி, பல விதத்தில் இந்த நிகழ்வு சிறப்பு மிகுந்ததாகக் கருதுகிறேன். உதாரணமாக பள்ளி தோழருக்காக, பள்ளி தோழர்களே
தலைமை, வாழ்த்துரை மற்றும் சிறப்புரை செய்த அருமையான நிகழ்வு. மேலும் , பேரனின் முதல் நூல் பிரதியை பாட்டனார் பெற்றுக் கொண்டதும் சிறப்பே.
அழைப்பு இங்கே உங்கள் பார்வைக்கு:
பள்ளி நண்பர்களான திரு. சிவக்குமார், திரு.அன்பரசன் முறையே இயற்பியல் மற்றும் கணித ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
த.ரெ.தமிழ் மணி என அழைக்கப்படும் எனதன்புத்தோழரும் தமிழ் ஆசிரியரும் கவிஞருமான சுப்ரமணி விழாவிற்க்கு தலைமை தாங்கினார்.
அவரின் தமிழ் ஆர்வமும் வேகமும் வியப்படைய வைக்கின்றன. அன்றாட வாழ்விலும் தூய தமிழிலில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.
ஆரூர் புதியவன் என அன்போடு அழைக்கப்படும் எனது அருமைதோழரும் சென்னை காய்தே மில்லத் கல்லூரி தமிழ்த் துறை தலைவருமான
ஹாஜா கனி சிறப்புரை ஆற்றினார். புதியதலைமுறைடிவியின் புது புது அர்த்தங்கள் நிகழ்ச்சியியின வாயிலாக பேராசிரியரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு.
அவரின் பேச்சாற்றல் தமிழகம் தாண்டி கடல் கடந்தும் பரவி இருப்பது உண்மை. சென்னையில் நண்பரை கல்லூரியில் சந்தித்து எனது நூலை வெளியிடவேண்டும் என்ற அன்புக்கட்டளையை தட்டாமல் ஏற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். நன்றிகள் பல.
(படம்: இடமிருந்து வலமாக - நண்பர்கள் சிவக்குமார், அன்பரசு, பாஸ்கர் மற்றும் ஹாஜா கனி)
பள்ளி தோழர்கள் என்று சொல்வதை விட வகுப்பு தோழர்கள் என்பதே பொருந்தும். நாங்கள் வ.சோ.ஆ.மேநிலைப்பள்ளியில் ஃபர்ஸ்ட் க்ரூப் எனச் சொல்லப்படும் கணிதம் ஒன்றாக படித்தோம்.
தோழர்கள் பள்ளிப் பருவஙகளில் நடந்த பல அனுபவங்களையும், நிகழ்வுகளையும் சுவைபட பேசினார்கள், எனக்கே சில நிகழ்வுகள் முதல் முறையாக இருந்தது. விழாவிற்க்கு வந்த அனைவரும் இந்த நிகழ்வுகளை மிகவும் சிலாகித்து பேசி மகிழ்ந்தனர்.
பாவலர் கலை பாரதி கவிதை நூலின் திறனாய்வில் சிறப்பம்சங்கள், பிடித்தவைகள், பிடிக்காதவைகள் ஆகியவற்றை அழகாக மேற்கோளுடன் எடுத்து வழங்கினார். "மழை" என்ற தலைப்பில் முத்தாய்பாக கவியரங்கமும் நடைபெற்றது.
சமீபத்தில் நான் இந்தியா சென்றிருந்த போது, ஒரு சில குறுகிய நாட்களில்தான் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. அதன் சுவடு தெரியாமல் கூட்டத்தினை நண்பர் த.ரெ.தமிழ் மணி மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
நாங்கள் மேல்நிலைப் பள்ளி முடித்து சரியாக இருபது வருடங்கள் முடிவுற்ற போதிலும் தமிழின் மூலம் இந்த சந்நிதிப்பு நிகழ்ந்தது மிகவும் நெகிழ்ச்சி.
அடுத்த ஒரு நல்ல நிகழ்வை எதிர்பார்த்து..
Facebook fan page:www.facebook.com/ejvpbook
ஆம், திருவாரூர் படைப்பாளர் கூட்டமைப்பின் சார்பில், திருவாரூரில் என் கவிதை நூல் "என் ஜன்னல் வழிப் பார்வையில்" வெளியீட்டு விழா 21 செப்டம்பர், 2014 ஞாயிற்றுக்கிழமை மாலை இனிதே நடைபெற்றது.
இது என் முதல் நூல் வெளியீட்டு விழா, எதுலும் முதல் என்பது தனித்துவம், தனிச் சிறப்பு உடையது. அதனால் தான் அது முதல் ;).
முதல் குழந்தையை, முதல் தடவை கையில் சுமப்பது போல அது ஒரு சுகானுபவம். மாமங்கம் பல ஆனாலும் மறக்க இயலாதது.
இளையராஜாவின் இசை வாரிசுகளான மூவரும் மெல்லிசைக் கச்சேரி மூலம் திருவாரூரில் இருந்துதான் தங்கள் இசை பயணத்தை தொடங்கினார்கள்.
சங்கீத மூம்மூர்த்திகள் பிறந்த ஊர், முன்னாள் முதல்வரின் ஊர் என திருவாருரின் சிறப்புகள் கணக்கில் அடங்கா.
இது மட்டுமின்றி, பல விதத்தில் இந்த நிகழ்வு சிறப்பு மிகுந்ததாகக் கருதுகிறேன். உதாரணமாக பள்ளி தோழருக்காக, பள்ளி தோழர்களே
தலைமை, வாழ்த்துரை மற்றும் சிறப்புரை செய்த அருமையான நிகழ்வு. மேலும் , பேரனின் முதல் நூல் பிரதியை பாட்டனார் பெற்றுக் கொண்டதும் சிறப்பே.
அழைப்பு இங்கே உங்கள் பார்வைக்கு:
பள்ளி நண்பர்களான திரு. சிவக்குமார், திரு.அன்பரசன் முறையே இயற்பியல் மற்றும் கணித ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
த.ரெ.தமிழ் மணி என அழைக்கப்படும் எனதன்புத்தோழரும் தமிழ் ஆசிரியரும் கவிஞருமான சுப்ரமணி விழாவிற்க்கு தலைமை தாங்கினார்.
அவரின் தமிழ் ஆர்வமும் வேகமும் வியப்படைய வைக்கின்றன. அன்றாட வாழ்விலும் தூய தமிழிலில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.
(படத்தில்- தமிழ் மணி)
ஆரூர் புதியவன் என அன்போடு அழைக்கப்படும் எனது அருமைதோழரும் சென்னை காய்தே மில்லத் கல்லூரி தமிழ்த் துறை தலைவருமான
ஹாஜா கனி சிறப்புரை ஆற்றினார். புதியதலைமுறைடிவியின் புது புது அர்த்தங்கள் நிகழ்ச்சியியின வாயிலாக பேராசிரியரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு.
அவரின் பேச்சாற்றல் தமிழகம் தாண்டி கடல் கடந்தும் பரவி இருப்பது உண்மை. சென்னையில் நண்பரை கல்லூரியில் சந்தித்து எனது நூலை வெளியிடவேண்டும் என்ற அன்புக்கட்டளையை தட்டாமல் ஏற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். நன்றிகள் பல.
(படம்: இடமிருந்து வலமாக - நண்பர்கள் சிவக்குமார், அன்பரசு, பாஸ்கர் மற்றும் ஹாஜா கனி)
பள்ளி தோழர்கள் என்று சொல்வதை விட வகுப்பு தோழர்கள் என்பதே பொருந்தும். நாங்கள் வ.சோ.ஆ.மேநிலைப்பள்ளியில் ஃபர்ஸ்ட் க்ரூப் எனச் சொல்லப்படும் கணிதம் ஒன்றாக படித்தோம்.
தோழர்கள் பள்ளிப் பருவஙகளில் நடந்த பல அனுபவங்களையும், நிகழ்வுகளையும் சுவைபட பேசினார்கள், எனக்கே சில நிகழ்வுகள் முதல் முறையாக இருந்தது. விழாவிற்க்கு வந்த அனைவரும் இந்த நிகழ்வுகளை மிகவும் சிலாகித்து பேசி மகிழ்ந்தனர்.
அப்பாவின் நண்பர்கள் திரு. V.G. கிருஷ்ணமூர்த்தி மற்றும்
திரு. S.N. தெட்சிணாமூர்த்தி அவர்களுக்கும்
மரியாதை செய்யப்பட்டது. படம் கீழே:
சமீபத்தில் நான் இந்தியா சென்றிருந்த போது, ஒரு சில குறுகிய நாட்களில்தான் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. அதன் சுவடு தெரியாமல் கூட்டத்தினை நண்பர் த.ரெ.தமிழ் மணி மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
நாங்கள் மேல்நிலைப் பள்ளி முடித்து சரியாக இருபது வருடங்கள் முடிவுற்ற போதிலும் தமிழின் மூலம் இந்த சந்நிதிப்பு நிகழ்ந்தது மிகவும் நெகிழ்ச்சி.
அடுத்த ஒரு நல்ல நிகழ்வை எதிர்பார்த்து..
என் ஜன்னல் வழிப் பார்வையில்:
Facebook fan page:www.facebook.com/ejvpbook
Please share your feedback.
Subscribe to:
Posts (Atom)