Thursday, October 30, 2014

தேவதைகள் வாழும் வீடு

தேவதைகள் பூமியில்  இருக்குமா ?, தெரியவில்லை
இருந்தாலும் ,வீட்டில் வாழுமா ?, தெரியவில்லை
வாழ்ந்தாலும், பாடுமா?, தெரியவில்லை
பாடினாலும், ஆடுமா?,  தெரியவில்லை

என் வீட்டில்  ஒரு தேவதை
வாழ்கிறாள்,
பாடுகிறாள்,
பாடிக்கொண்டே ஆடுகிறாள்!

என குழந்தைகள் இருக்கும் வீடு அத்துணை மகிழ்ச்‌சி நிரம்பியது. அதிலும்,
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.

ஏதோ ஒரு தருணத்‌தில், கண்டிப்பாக யாரோ ஓரு குழந்தை உங்களை 'அட' என ஆச்சரியப்பட வைத்திருக்கும். அது உங்கள் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆவது இயல்பு.
அது குழந்தை உங்களை அம்மா, அப்பா என விளித்ததாகவோ அல்லது தவழ்ந்த குழந்தை நடக்க தொடங்கியதோ அல்லது வேறு எதுவாயினும் இருக்கலாம்.

அதே குழந்தைகளிடம் தான் சில சமயங்களில் ஏனோ தானோ என பேசி மாட்டிக் கொண்ட அனுபவங்களும் இருந்திருக்கலாம். அப்படி நான் 'னே' என முழித்த சம்பவத்தை பார்ப்போம்.

நேற்று என்னுடய இரண்டு வயது இளையமகளை தூங்க வைக்கும் முயற்சியில் இருந்தேன் (முயற்சி மட்டுமே), ;) அவளை தூங்க வைக்கிறேன் பேர்வழின்னு நான் மட்டும் சில நாள் தூங்கிய அனுபவங்களும் உண்டு. பாப்பாவை தட்டி கொடுத்துட்டு இருக்கிறப்போ, திடீர்னு வெளியே பிளைன் போற சத்தம் கேட்டது. இது ஏன்டா உள்நாட்டு சதி போல இருக்கேன்னு நினைச்சப்போ, வழக்கம் போல "அது என்ன? " அப்படின்னா.

நான் "ஏரோபிளேன்" அப்படினு சொல்லி விடாம, கூடவே உனக்கு ஒன்னு வாங்கி தரட்டுமான்னு கேட்டேன். என்னுடய ஜாதகத்துல அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரியவேயீல்லங்க.. ஏங்க, நிலாவ புடிச்சு தரன்னு சொல்றப்ப,  ஏரோபிளேன் வாங்கிதரன்னு சொல்லக்கூடாதங்க !? :)

அவ திரும்ப சொன்ன பதில் இருக்கே.. "ஒன்னு வேணாம் அப்பா, இரண்டா வாங்கலாம்". என வெள்ளந்தியா சொன்னதும் கன்னத்தில் பளார்னு அடிச்சது போல இருந்தது.

வேற என்ன பேச்சு அப்புறம்.  விமானம் கடந்த பின் வெளியே பூரண அமைதி, நான் இரவின் ஒளியில் முகத்தை தலையணையில் புதைத்தேன்.





1 comment: