Tuesday, April 21, 2015

கவிஞர் வைரமுத்து - சர்ச்சை

கவிஞர்  வைரமுத்துவைப் பற்றி பல விமர்சனகள் JayMo சமூக வலைதலஙளில் வைக்கப்படும் இந்த தருணத்தில் வைரமுத்து  பற்றிய என்னுடைய மீள்பதிவு.


கவிதையில் அவருக்கு  இருக்கும் தேர்ச்சி மீது எனக்கு என்றும் மிகப்பெரிய மரியாதையுண்டு.

அந்த விளம்பரத்து முழுக்காரணமும் குமுதம் மட்டுமே என்பது என் நம்பிக்கை. வைரமுத்துவின் இடம் அவருக்கு மட்டுமெ.  மேலும், யாரும் அவரின் பெயரை இருட்டடிப்பு செய்துவிட முடியாது. 

மீள்பதிவு:

--இன்று July-13, கவிஞர்  வைரமுத்துவின் 60வது பிறந்த நாள். அவரை பற்றி என்னுடய சில அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள  விரும்புகிறேன்.


கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்த பின்பு திரைப் பாடல் வரிகளை கவனிக்க ஆரம்பித்தேன், அப்படி கவனிக்க ஆரம்பித்த புதிதில், என்னை கவர்ந்த பெரும்பாலான வரிகளை வைரமுத்துதான் எழுதி இருந்தார். பள்ளி பாடங்களை தவிர்த்து அறிமுகமான முதல் தமிழ் கவிஞரும் அவரே.

தமிழ் பாடல்களை சித்தெறும்பு கடித்துக் கொண்டிருந்த நாட்களில் இவர் பாடல்கள் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தன. இளையராஜா, வைரமுத்து  மோதல் என்பது இந்த உலகறிந்தது. அந்த காலகட்டத்தில் வைரமுத்து- ஏ.ர் ரகுமான் கூட்டணி வெற்‌றி பெற பிரார்தித்த நாட்களும் உண்டு.

தமிழ் நாளேடுகளை தாண்டி வானொலியில் அவருடைய குரலையும் தமிழையும் கேட்டு ரசித்தேன். அவை பெரும்பாலும் திரை சார்ந்ததாகவே இருந்தது.

கல்லூரி நாட்களில் அவருடைய கவிதைகளை அங்கென்றும் இங்கென்றுமாய் வாசித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது  மலேசிய சந்திப்பு.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வேலை செய்யும்போது வைரமுத்துவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதுவும் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தேன்.  மேலும் அன்று அவரின் ஆட்டோகிராப் பெறும் பேறு பெற்றேன். அந்த நிகழ்வே  கவிஞரின் கவிதைகளை மேலும் உள்ளார்ந்து படிக்கத் தூண்டியது.

கவிதை என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல,   அது ஓர் உணர்வு என்பது தெளிந்தது. இப்போது கூட கவிஞரின் மூன்று  பக்கத்துக்கு மிகமான சில கவிதைகளை என்னால் மனப்பாடமாக சொல்லக் கூடும். (கவனிக்க: திரை பாடல்கள் அல்ல)

அவரின் எல்லா வகை படைப்புகளுடன் பயணித்ததில்,  திரைப்பட பாடல்களை தாண்டியது  அவரது ஆளுமை என்பது என் எண்ணம்.  என்னை பாதித்த தமிழின்  சொந்தகாரர் அவர்.  அவரின் பாதிப்பு இல்லாத இளம் கவிஞர்கள் இல்லை எனவே சொல்ல தோன்றுகிறது.

அவரை பற்றிய எளிய ரசிகன்  என்னுடய கவிதை சில துளிகள்,
"என் ஜன்னல் வழிப் பார்வையில்"  கவிதைத் தொகுதியில் இருந்து

**************
"வடுகப்பட்டி தந்த வைரமே,
பொன்மாலைப் பொழுதில்,
ஒரு விடியலைத் தந்தவனே!

முண்டாசு, முரட்டு மீசை: பாரதி,
வெள்ளை ஜிப்பா, கருப்பு மீசை: வைரமுத்து,
தமிழனின் கடைசி அடையாளமாக
உன் மீசை!
...

அழகியலையும் அறிவியலையும்
புதுக் கவிதையில் கோத்து
மணம் வீசச் செய்தீர்!
....
தமிழ்ச் சாகரத்தின்
கலங்கரை விளக்கமே!
...

அரை நூற்றாண்டு கடந்தபின்பும்
தமிழ்ச் சமுதாயத்தில்
முதல் இளைஞனாக நீ,
தமிழின்
கடைசி நம்பிக்கையாகவும் நீயே!
"

என் ஜன்னல் வழிப் பார்வையில்:

Facebook fan page:www.facebook.com/ejvpbook

Monday, April 13, 2015

கலிபோர்னியா - பயண அனுபவங்கள்

ப்ளோரிடாவில் வசிக்கும் நான் சில வாரங்களுக்கு முன் Spring Breakக்கு குடும்பத்துடன் கலிபோர்னியா சென்று  வந்தோம்.

இங்கே என்னுடைய  பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் பிரிப்படுகிறேன்.

 கலிபோர்னியா செல்வது எனக்கு இரண்டாவது தடவை. இதற்கு முன்பு அலுவல் நிமித்தமாகக்  கடந்த வருடம் சென்றிருந்தேன்.

இந்த முறை பயணத்தின் நோக்கம் ஊரை சுற்றிப் பார்ப்பது, முக்கியமாக அங்கே வசிக்கும் எனது உறவினர்களின் வீடுகளுக்குச்   செல்வதும் தான்.

சித்தி மகன் கார்த்திக்கும் , அத்தை மகன் ஆனந்தும்  இருப்பது கலிபோர்னியாவில் இருக்கும்  சான்பிரான்சிஸ்கோ நகரம்.

அமெரிக்காவில்  சொந்த பந்தம்னு தலைக் காட்ட இருப்பது இந்த இரு
 வீடுகள்தான். அதையும் விட்டா எப்படிங்க?  மட்டுமில்லாமல் ,  என்னுடைய குடும்பத்தை ஆனந்தின் குடும்பம் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்கிறார்கள் என்பது ஒரு ஹைலைட் வேற .

ஆமாம், தாராளமயமாக்கல் எனும் சூறாவளியில் ,   உலகத்தின்  மூலைக்கு
ஒன்றாக வீசி ஏறியப்பட்ட உறவுகள்  நாங்கள் .

நான்  நினைத்ததுப் போலவே இந்தப் பயணம் மிகச் சிறப்பாகவே  அமைந்தது.
இந்தமுறை  கலிபோர்னியாவின் நீள அகலத்தை முடித்த வரை நன்றாக அளந்தேன் என்றே சொல்லவேணும். ஆம், ஏறக்குறைய சுமார் ஆயிரம் மைல்கள் காரிலேயே சுற்றினேன்.    

கலிபோர்னியா பயணத்தின் வியப்புத் தீருமுன் செய்யும் பதிவு இது.

சமீபத்தில் வெளியான "ஐ" பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட
முன்னாள் ஆணழகன் "அர்னால்டு"  இந்த ஊருகாரர்தங்க.  அவர் மாகாண கவர்னராக இருந்ததும்   கலிபோர்னியா தாங்க.

உலகச்  சினிமாவின் கோட்டையான   உலகம் போற்றும் ஹாலிவூட் (hollywood) இங்கே தான் இருக்கிறது.

கம்யூட்டர்  சுல்தான்களாகிய   உலகப் புகழ்பெற்ற  ஆப்பிள் , கூகுல்  போன்ற நிறுவனங்கள்  இருக்ககூடிய சிலிக்கான் பள்ளத்தாக்கு கலிபோர்னியாவில் தான் இருக்கிறது.

"சிலிக்கான் பள்ளத்தாக்கு" அமெரிக்காவில்  இந்தியர்களின் கோட்டை என்பதும் ஒரு கூடுதல் தகவல். குறிப்பாக தமிழர்களின் கோட்டை என்றால் பொருத்தமாக இருக்கும்.

கோல்டன் கேட் பாலம் இருப்பது இங்கேதான் என பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.


இவ்வாறு உலகப் புகழ் பெற்ற கலிபோர்னியா அமெரிக்காவின் மிக முக்கியமான மாகாணமும் கூட.  அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் 13% கலிபோர்னியாவின் பங்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கலிபோர்னியாவின் கிழக்குத் திசையில் நெவாடாவும்,  அரிசோனா மாநிலங்களும், மேற்கே பசுபிக் கடலும், வடக்குத் திசையில் ஒரிகன் மாநிலமும், தெற்குத் திசையில் மெக்சிகோவின் பாஹா கலிபோர்னியாவும் உள்ளன (கிழே படத்தில் மஞ்சள் நிறத்தில்).



இம்மாநிலத்தின் கொஞ்சம் வரலாற்றையும் பார்த்து விடலாமே.

1846-1848ல் நடந்த மெக்சிக்கோ  அமெரிக்கப் போரில்  இப்பகுதியை மெக்சிக்கோவிடம் இருந்து அமெரிக்கா கைப்பற்றியது.  பின்பு 1850ல் கலிபோர்னியா அமெரிக்காவின் 31 ஆவது மாநிலமாக மாறியது.

கலிபோர்னியாவின் மக்கள்தொகை  37 மில்லியன், அமெரிக்காவின் மக்கள்தொகையில் கலிபோர்னியாவுக்கே முதலிடம்.  அதிகப்படியான மக்கள் இங்கே வாழ பலதரப்பட்ட  காரணங்கள்  சொல்லலாம்.

முக்கியமாக இங்கே கிடைக்கும் அபரிமிதமான வேலைவாய்ப்ப்பு  ,  ரொம்பக் குளிர் அல்லது வெயில் இல்லாத நல்ல அருமையான தட்பவெட்பம் போன்றவற்றைச் சொல்லலாம்.

கோல்ட் ரஷ்  நேரத்தில் கலிபோர்னியாவில் புதிதாகக்  கண்டுபிடிக்கப்பட்ட தங்க வயல்கலை நோக்கி  மிகப் பெரிய மக்கள் படையெடுப்பு நடைப்பெற்றது. கோல்ட் ரஷ் கலிபோர்னியாவின் வரலாற்றில் நடந்த ஓர் அதி முக்கியமான நிகழ்வு.

கலிபோர்னியா Golden State அல்லது "தங்க மாநிலம்" என்றே சொல்லபடுகிறது.
அதைப்  பற்றி நேரம் கிடைக்கும் பட்சத்தில் விரிவாகப்  பார்க்கலாம்.


அதுபோல கலிபோர்னியாவை  உலகின் பிரட் பாஸ்கட் என்று சொல்ல காரணமில்லாமல் இல்லை. பால்,பழம், காய்கறி  மற்றும்   ஒயின் என உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாகாணம் இது.


கலிபோர்னியா ஓர் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம். வேறு எந்த மாநிலத்துக்கும்  இல்லாத சிறப்பம்சமாக இங்கே குளிர், பனி, வெயில் போன்ற சீதொசனம் வருடத்தின் எல்லாக்  காலங்களிலும் இருக்கும்.

அதுபோலப்  பாலைவனம், மலை ,கடற்கரை  மற்றும் சமவெளி என எல்லாவகையான நிலபரப்புகளையும்   உள்ளடக்கியது கலிபோர்னியா.

சேக்ரமெண்டோ கலிபோர்னியாவின் தலைநகராக இருந்தாலும்,  லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ போன்றவை இம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்கள்.

என்னுடைய பயணத்தின் பெரும்பாலான நேரத்தை  வளைகுடாப் பகுதியிலும் தெற்குக்  கலிபோர்னியாலும் செலவிட்டேன். வரும் கட்டுரைகளில் அங்கே நான் ரசித்தவைகளை  உங்களுடன் பகிர முயற்சிக்கிறேன்.

Wednesday, April 1, 2015

இதய நிறுத்தம் - உடனடிச் சிகிச்சை


எதிர்பாராத விதமாக உங்கள் நண்பர் அல்லது பணியிடத்தில் அருகில் இருப்பவர் மயக்கமடைந்து விழுந்து,  தன்னுணர்வின்றி   செயற்படாத நிலையில் இருந்தால் உடனடியாக நீங்கள் செய்வது என்னவாக இருக்கும்?

பதற்றத்தில், அக்கம் பக்கம் எவரையாவது  துணைக்கு அழைப்பீர்களா ? அப்போது அவரை தனியே விட்டு செல்லலாமா?

அதிகபட்சமாக உங்களிடம் தொலைபேசி இரூக்கும்    பட்சத்தில் எண் 108 அல்  911 யை அழைப்பீர்கள். ஆம்புலன்ஸ் வர ஆகும் 15-20  நிமிட அவகாசத்தில் நீங்கள் செய்வது என்னவாயிருக்கும்? அதுவரை அவரை எந்த நிலையில் கிடத்தியிருப்பீர்கள். ?  இப்படிப்  பல கேள்விகள் எழுவது இயற்கை.

CPR அல்லது மீளவுயிர்ப்பிப்பு எனும் முதல் உதவி சிகிச்சை  பற்றிக்  கேள்விப் பட்டதுண்டா? நேற்று  அலுவலகத்தில் எனக்கு இதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

கற்றதில் பெற்றது சில.

நான் மருத்துவ நிபுணர் இல்லை, ஆகவே Wikipediaவின் துணையுடன் சில தகவல்கள்:  இங்கே முடித்தவரை டெக்னிக்கல் வார்தைகளை தவிர்த்திருக்கிறேன்.

  • Cardiac Arrest(இதய நிறுத்ததை)  Heart Attack (மாரடைப்பு) உடன் குழப்பிக் கொள்ளாதீர். இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது.


  • மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது.


  • இதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும். மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இதய நிறுத்தம் ஏற்படலாம்.


  • குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன், ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது தடைபடுகின்றது. மூளைக்கு குருதியோட்டம் தடைபடுவதால் நினைவிழப்பு ஏற்படுகின்றது, அத்துடன் மூச்சுவிடுவதிலும் (சுவாசிப்பதிலும்) சிக்கல் ஏற்படுகின்றது.


  • இதய நிறுத்தம் ஏற்பட்டு ஐந்து நிமிடங்களாக  சிகிச்சை இல்லாதவிடத்து ஆக்சிசன் இல்லாத காரணத்தால் மூளை  செயலிழந்து இறந்துவிடுகின்றது; இக்காரணங்களால் உயிர் பிழைப்பதற்கு உடனடிச் சிகிச்சை இன்றியமையாதது.
  • CPR (Cardiopulmonary resuscitation) உடன் AED (Automated External Defibrillator) எனும் கருவியையும் இதய நிறுத்தத்திற்கு முதல் உதவிக்காகப்  பயன்படுத்தலாம்.


  • CPR என்பது மார்புப் பகுதியில் இதயத்திற்கு மேல் கைகளால் அழுத்திப் பிசைந்து, வாயின் மேல் வாய் வைத்துச் சுவாசத் தூண்டல் செய்யும் முறையாகும்.



  • AED என்பது ஒரு சிறிய மின்னணு சாதனம்.   இதயத்துடிப்பை சரியாகக்  கண்காணித்து,தேவைப்பட்டால் இதயத்துக்கு மின் அதிர்ச்சி செலுத்தக்கூடியது.  அதனால் கையாள்வதில் மிக கவனம் தேவை.  AED சாதனத்தை பெரும்பாலும் எல்லா முதல் உதவி பெட்டியூடன் அமேரிக்காவில் வைத்திருக்கிறார்கள்.




என்னுடைய பதிவு ஒரு தகவலுக்காகவே. நீங்கள் எவருக்கேனும் உதவ வேண்டுமெனில் கண்டிப்பாக முறையான பயிற்சி  அவசியம்.
அமெரிக்கன் ரெட் க்ராஸ் தேவையான பயிற்சியும் சான்றிதழும் தருகிறார்கள்.

http://www.redcross.org/

முடிந்தால்  பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். யாருக்கு தெரியும் ஒர் உயிரை காப்பாற்ற கடவுள் உங்களை விதித்திருக்கிறார் என்று. :)

Reference:

http://en.wikipedia.org/wiki/Cardiopulmonary_resuscitation
http://en.wikipedia.org/wiki/Automated_external_defibrillator