எதிர்பாராத விதமாக உங்கள் நண்பர் அல்லது பணியிடத்தில் அருகில் இருப்பவர் மயக்கமடைந்து விழுந்து, தன்னுணர்வின்றி செயற்படாத நிலையில் இருந்தால் உடனடியாக நீங்கள் செய்வது என்னவாக இருக்கும்?
பதற்றத்தில், அக்கம் பக்கம் எவரையாவது துணைக்கு அழைப்பீர்களா ? அப்போது அவரை தனியே விட்டு செல்லலாமா?
அதிகபட்சமாக உங்களிடம் தொலைபேசி இரூக்கும் பட்சத்தில் எண் 108 அல் 911 யை அழைப்பீர்கள். ஆம்புலன்ஸ் வர ஆகும் 15-20 நிமிட அவகாசத்தில் நீங்கள் செய்வது என்னவாயிருக்கும்? அதுவரை அவரை எந்த நிலையில் கிடத்தியிருப்பீர்கள். ? இப்படிப் பல கேள்விகள் எழுவது இயற்கை.
CPR அல்லது மீளவுயிர்ப்பிப்பு எனும் முதல் உதவி சிகிச்சை பற்றிக் கேள்விப் பட்டதுண்டா? நேற்று அலுவலகத்தில் எனக்கு இதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
கற்றதில் பெற்றது சில.
நான் மருத்துவ நிபுணர் இல்லை, ஆகவே Wikipediaவின் துணையுடன் சில தகவல்கள்: இங்கே முடித்தவரை டெக்னிக்கல் வார்தைகளை தவிர்த்திருக்கிறேன்.
- Cardiac Arrest(இதய நிறுத்ததை) Heart Attack (மாரடைப்பு) உடன் குழப்பிக் கொள்ளாதீர். இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது.
- மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது.
- இதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும். மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இதய நிறுத்தம் ஏற்படலாம்.
- குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன், ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது தடைபடுகின்றது. மூளைக்கு குருதியோட்டம் தடைபடுவதால் நினைவிழப்பு ஏற்படுகின்றது, அத்துடன் மூச்சுவிடுவதிலும் (சுவாசிப்பதிலும்) சிக்கல் ஏற்படுகின்றது.
- இதய நிறுத்தம் ஏற்பட்டு ஐந்து நிமிடங்களாக சிகிச்சை இல்லாதவிடத்து ஆக்சிசன் இல்லாத காரணத்தால் மூளை செயலிழந்து இறந்துவிடுகின்றது; இக்காரணங்களால் உயிர் பிழைப்பதற்கு உடனடிச் சிகிச்சை இன்றியமையாதது.
- CPR (Cardiopulmonary resuscitation) உடன் AED (Automated External Defibrillator) எனும் கருவியையும் இதய நிறுத்தத்திற்கு முதல் உதவிக்காகப் பயன்படுத்தலாம்.
- CPR என்பது மார்புப் பகுதியில் இதயத்திற்கு மேல் கைகளால் அழுத்திப் பிசைந்து, வாயின் மேல் வாய் வைத்துச் சுவாசத் தூண்டல் செய்யும் முறையாகும்.
- AED என்பது ஒரு சிறிய மின்னணு சாதனம். இதயத்துடிப்பை சரியாகக் கண்காணித்து,தேவைப்பட்டால் இதயத்துக்கு மின் அதிர்ச்சி செலுத்தக்கூடியது. அதனால் கையாள்வதில் மிக கவனம் தேவை. AED சாதனத்தை பெரும்பாலும் எல்லா முதல் உதவி பெட்டியூடன் அமேரிக்காவில் வைத்திருக்கிறார்கள்.
என்னுடைய பதிவு ஒரு தகவலுக்காகவே. நீங்கள் எவருக்கேனும் உதவ வேண்டுமெனில் கண்டிப்பாக முறையான பயிற்சி அவசியம்.
அமெரிக்கன் ரெட் க்ராஸ் தேவையான பயிற்சியும் சான்றிதழும் தருகிறார்கள்.
http://www.redcross.org/
முடிந்தால் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். யாருக்கு தெரியும் ஒர் உயிரை காப்பாற்ற கடவுள் உங்களை விதித்திருக்கிறார் என்று. :)
Reference:
http://en.wikipedia.org/wiki/Cardiopulmonary_resuscitation
http://en.wikipedia.org/wiki/Automated_external_defibrillator
No comments:
Post a Comment