Tuesday, October 4, 2016

எழுத்தாளர் சுஜாதா - 14 வருட அதிசயம்

எழுத்தாளர் சுஜாதா மிகைப்படுத்தலின்றி அதீத உணர்ச்சிவசப்படாமல் எழுதக்கூடியவர். அதை உறுதி செய்வதுபோல் இருந்தது நான் சமீபத்தில் வாசித்த அவருடைய  ''நிலா நிழல்'' நாவலின் இரண்டாம் பதிப்பின் முன்னுரை.  அந்த 14 வருட அதிசயத்தை  நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

சுஜாதா ''நிலா நிழல்'' யை   தினமணிக் கதிரில் தொடர்கதையாக 1988ல் எழுதுகிறார். அந்த சமயத்தில் ஏதோ காரணங்களுக்காக
அதில் ஓரு அத்தியாயம் வெளியாகாமல் விடுபட்டுபோகிறது. அதை சுஜாதா உட்பட யாரும் கவனிக்கவேயில்லை. அந்தக் கதையை கவிஞர் மனுஷ்யபுத்திரன் உயிர்மையில் இரண்டாம் பதிப்பாக வெளியிடும்போது கவனித்து சுஜாதாவிடம் சொல்ல. சுஜாதா 14 வருசங்கள் கழித்து அந்த விடுபட்ட அத்தியாயத்தை எழுதித் தருகிறார். நிலா நிழல் லின் இரண்டாம் பதிப்பில் இதை சிலாகித்து எழுதிய சுஜாதாவின் முன்னுரை இங்கே.

"உலகத்தில் ஒரு அத்தியாயத்தை மட்டும் பதினான்கு வருஷம் கழித்து எழுதப்பட்ட நாவல் இது என்று நினைக்கிறேன்.
எழுதும்போது மனதின் அடித்தளத்தில் தேங்கியிருந்த கதைக்கருவின் வடிவம் மறு உயிர் பெற்றது எழுத்து பிசினஸ்ஸில்
உள்ள விந்தைகளில் ஒன்று. "



இந்த நிகழ்வை கண்டிப்பாக வேறேந்த எழுத்தாளராக இருந்தாலும்
உணர்ச்சிப்பூர்வமாக பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருப்பார்கள் என்பது எனது அனுமானம்.

ஒரு அத்தியாயம் தொலைந்ததை யாரும் கவனிக்கவில்லை என்பது முதல் அதிசயம். அதைத் தாண்டி,  சுஜாதா கதை எழுதியது 1988, பின் 2002ல் அதாவது  14 வருடங்களுக்கு பின் விடுபட்ட அந்த அத்தியாயத்தை எழுதுகிறார். நான் 14 வருடங்களுக்கு பிறகு 2016ல் அதை கவனித்து எழுதுகிறேன்.  இந்த நிகழ்வு 14 வருட அதிசயம் தானே  ? ;)



புகைப்படங்கள் நன்றி:
www.google.com



6 comments:

  1. ஆகா
    அதிசயம்தான் நண்பரே

    ReplyDelete
  2. அதிசயம்! அதுவும் எழுத்தாளுமைகளுல் உச்சத்தில் இறுதிவரை இருந்த எழுத்தாளர் சுஜாதா!!..14 என்பது புராணகாலத்திலிருந்து எழுத்துலகம் வரை வரலாறு என்று சொல்லலாம் இல்லையா...ராமன் வனவாசம் சென்றது 14...என்று தொடங்கி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி, நல்ல அவதானிப்பு !! :)

      Delete
  3. ***சுஜாதா ''நிலா நிழல்'' யை தினமணிக் கதிரில் தொடர்கதையாக 1988ல் எழுதுகிறார். அந்த சமயத்தில் ஏதோ காரணங்களுக்காக
    அதில் ஓரு அத்தியாயம் வெளியாகாமல் விடுபட்டுபோகிறது. அதை சுஜாதா உட்பட யாரும் கவனிக்கவேயில்லை.***

    என்னங்க சொல்றீங்க? ஒரு அத்தியாயம் விடுபட்டுவிட்டதா? அப்படினா என்ன அர்த்தம்? கதை படிச்சவர்களுக்கும் விடுபட்டுது தெரியலை. கதை எழுதியவர்களுக்கும் தெரியலை. பிரசுரிச்சவங்களுக்கும் தெரியலை? நாசமாப்போச்சு போங்க! இதில் எதுவும் அதிசயம் தெரியவில்லை. எழுத்தை சைட் பிஸினெஸாக வைத்திருந்த எழுத்தாளரின் பொறுப்பற்ற தன்மை மற்றும் கவனக்குறைவுதான் தெரியுது. அவர் கதை படிக்கிறவா எல்லாம் இவரு என்ன குப்பையை எழுதினாலும் என்னமா எழுதியிருக்காரு சீனியஸ்னு சொல்லீட்டுப் போறவங்க போல. நாலு அத்தியாயம் விடுபட்டாலும், நாலு அத்தியாயம் விடுபட்ட சுஜாதா கதை புரியலைனு சொன்னா நமக்கு அறிவில்லைனு நெனச்சுடுவாங்க, அவருதான் சீனியஸாச்சே புரிஞ்சமாதிரி நடிப்போம்னு அலையும் மாக்கள் போல இருக்கு.

    ஆமா இதிலென்ன பெரிய அதிசயத்தை கண்டீங்கனு தெரியவில்லை!

    ReplyDelete
  4. //என்னங்க சொல்றீங்க? ஒரு அத்தியாயம் விடுபட்டுவிட்டதா? அப்படினா என்ன அர்த்தம்? கதை படிச்சவர்களுக்கும் விடுபட்டுது தெரியலை. கதை எழுதியவர்களுக்கும் தெரியலை. பிரசுரிச்சவங்களுக்கும் தெரியலை? //

    வாங்க வருண். நீங்க சொல்றது உண்மைதான். அது அந்தக் காலம். சுஜாதாவோட லாண்டரி லிஸ்டை பிரசுரிச்சு அதை மக்கள் படிச்சகாலம்.

    இப்போ தமிழில் வணிக எழுத்து எழுதி சூப்பர் எழுத்தாளராக வர்ரது ..

    ReplyDelete