Google+ Followers

Wednesday, December 27, 2017

அறம்- எழுத்தாளர் ஜெயமோகன்

புதிதாக என்னை(எனது எழுத்தை) வாசிக்கத் தொடங்குபவர்கள் தனது "அறம்" தொகுப்பில் இருந்துத் தொடங்கலாம் என எழுத்தாளர் ஜெயமோகன்
ஒருமுறை சொன்னதாக நினைவு.

அந்தத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன்பு வாசித்திருந்தாலும், அதில்
குறிப்பாக  3 கதைகள் மட்டும்  மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுபவை. அவருடைய மொழியில் சொல்வதென்றால் தீராத மனஎழுச்சி கொள்ளச் செய்பவை. அந்த 3 கதைகள் "சோற்றுக் கணக்கு", "யானை டாக்டர்", "நூறு நாற்காலிகள்". ஆச்சர்யப்படத் தக்கவகையில் அந்த மூன்றும் தொகுப்பில் 4,5,6 என வரிசையாக இடம்பிடித்திருக்கிறன.

என்னைப் பொறுத்தவரை, அந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கதை சந்தேகமின்றி 'சோற்றுக் கணக்கு'. அப்படிச் சொல்ல அந்தக் கதையில் வரும் கெத்தேல் சாகிபு போலோருவர் எனது கல்லூரி நாட்களில் இருந்ததுகூட காரணமாக இருக்கலாம்.

அறத்தின் எல்லா சிறுகதைகளும் அவருடைய தளத்தில் இலவசமாகவும் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள்.

அறம், ஜெயமோகன், வம்சி பதிப்பகம்

8 comments:

 1. கெத்தேல் சாகிபு உணவகம் இன்றும் உண்டு ஆனால் அதை அவர் பிள்ளைகள் நடத்துகின்றார்கள்
  அது இப்போ விலை உயர்ந்த உணவகம்

  ReplyDelete
  Replies
  1. ஓ, அப்படியா!? தகவலுக்கு நன்றி.

   Delete
  2. இந்த காலத்தில், அவர் மகன்களும் கெத்தேல் சாகிபாக இருப்பார்கள் என எதிர்பார்க்க இயலாது.

   Delete
 2. நன்றி நண்பரே
  அவசியம் வாசிப்பேன்

  ReplyDelete
 3. என் பின்னூட்டத்தைக் காணேமே? அது உங்கள் மனத்தைப் புண்படுத்திவிட்டதா?

  ReplyDelete
 4. ஒருவேளை நான் எழுதியது வந்து சேரவில்லையென்றால், மீண்டும் நினைவிலிருந்து எழுதுகிறேன்:

  ஜெயமோகனை முதன்முதலாக வாசிக்க விழைவோர் இங்கே நீங்கள் பேசும் சிறுகதைத்தொகுப்பான ''அறம்'' நூலில் இருந்து தொடங்கலாம் என்று அவரே சொன்னதாக உங்களுக்கு நினைவு. ஓர் எழுத்தாளர் இப்படி சொல்வது விசித்திரமாக இருக்கிறது! ஏனெனில் எழுத்தாளர்கள் தங்கள் நூலை விமர்சிக்கமாட்டார்கள்.

  அவன் காலமானபின் ஓர் எழுத்தாளனின் படைப்புக்களை - முதல், இடை, கடைப் பருவங்கள் என பிரிக்கலாம். இருக்கும் காலத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருந்தால், முதல், இடை, த்ற்காலம் எனப் பிரிக்கலாம். இவற்றுள் தொடக்க காலத்தில் எழுதியவை அவரது முதிர்ச்சியின்மையைக்காட்டும். ஜூவனைல். இடைக்காலம் அவரது படைப்புக்களை மெருகூட்டும்; இறுதிக்காலம் முதிர்ச்சியோடு இருக்கும்.

  அதே வேளை, இப்பிரிவுகள் எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தா. ஏனெனின், சிலர் முதல் நாவலிலேயே பெரும் உயரத்துக்குச்சென்றுவிடுவர். அவரது மாஸ்ட்ர் பீஸ் என்னவென்றால் அதைத்தான் காட்ட வேண்டியதிருக்கும். (எ.கா இந்துமதியின் முதல் நாவல் (டெபூ நாவல்) ''தரையில் இறங்கும் விமானங்கள்''. சிலர் இடைக்காலத்தில் ஜொலிப்பார்கள்; பின்னர் இறுதிக்காலத்தில் அவரது படைப்புக்கள் பொலிவை இழந்துவிடும். இதற்கு காரணம் ''ஃபாடீக்'' அதாவது அவரது படைப்பு வலிமை களைப்பு நிலையை அடைந்துவிடும். ஒரே வட்டத்துக்குள் இருந்து வெளிவர முடியாத நிலை. ஆங்கிலக்கவி வேர்ட்ஸ்வொர்த்து என்பானின் இறுதிக்காலக்கவிதைகள் அனைத்தும் வாசிக்க முடியாதவைகளாகின. ஆங்கில நாவலாசிரியர் நாயிபால் என்பவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் கமிட்டி, அவரது தொடக்க கால நாவல்களை பெரிதும் பாராட்டி இப்பரிசை வழங்குகிறோம். அவரை வாசித்தவர்களின் பொதுக்கருத்தும் அதே. அதாவது நாயிபாலில் தொடக்க நாவலகள் ஒரு மைக்ராண்ட் கம்யூனிட்டியின் தம் புகுந்த நாட்டில் எப்படி தங்களை நிலைநிறுத்த பாடுபட்டன என்பதைச் சொல்வது. அதன் பின்னர் எழுதிய எந்த் நாவலில் அந்த உயரத்துக்குப் போக முடியவில்லை.

  இப்படிப்பட்ட சூழலில் ஜெயமோஹன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக எழுதிவரும் எழுத்தாளர். எக்கால கட்டத்தில் இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை எழுதினார்? அதற்கு முன் ஏதாவது உண்டா? அங்கேயிருந்து தொடங்காமல் ஏன் நாம் இங்கேயிருந்து தொடங்கலாமென்கிறார்? உங்கள் வாசிப்பின்படி, இக்கதைகளுக்கு அவரின் மற்ற படைப்புகளுக்கு இல்லா சிறப்பேனும் உண்டா? எனவே இதிலிருந்து தொடங்கலாமென்கிறாரா? இவற்றையெல்லாம் அறிய விழைகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய மிகநீண்ட மறுமொழிக்கு நன்றி.முதலில் ஒரு விசயம். ஜெமோ வை உயர்த்தி பிடிக்கவேண்டும் என்பதல்ல எனது நோக்கம். அறம் நூலின் எனது வாசக அனுபவத்தை பகிர்வது மட்டுமே.

   விசயத்திற்கு வருவோம்.

   // என்னை புதிதாக வாசிக்கத் தொடங்குபவர்கள் அறத்தில் இருந்து தொடங்கலாம் //
   இதை நான் கீழ்கண்டவாறு புரிந்துகொள்கிறேன்.

   ஜெமோ பல்லாண்டுகள் எழுதிவரும் ஒரு மூத்தபடைப்பாளி. அவருடைய படைப்புகள் பல நூறு.
   அதனால், இன்று புதிதாக தமிழின் வாசகவட்டத்தில் நுழைபவரகள் ஜெமோவை எங்கிருந்து தொடங்குவது என மலைப்பது இயற்கை. அவர்களை வழிபடுத்தும் நோக்கில் அப்படிச் சொல்லியிருக்கலாம். அதாவது
   அறத்தை ஒரு நூலகத்தின் நுழைவாயில் போல் வாசித்து அவருடைய படைப்புலகத்தில் எளிதாக நுழைய அப்படிச் சொல்லியிருக்கலாம்.

   நன்றி!

   Delete