Friday, October 5, 2018

கவிஞர் மு.மேத்தா - ஒரு சந்திப்பு

விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்.

எனும் கவிதையால் கல்லூரி நாட்களில் அறிமுகமாகி மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞர் மு.மேத்தா வை சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது சென்னையில் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன்.

"புதுக்கவிதையின் தாத்தா-மேத்தா" என வலம்புரி ஜான் அவர்களால் செல்லமாக பாராட்டப்பட்டவர் .சென்னை மாநிலக் கல்லூரியில்  35 ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியர். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.


ஆனால், நேரில் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் மிக எளிமையாக பழகினார்.
தற்போதைய தமிழ் கவிதைப் போக்கு,  தமிழக அரசியல் பற்றி
எந்தவித தயக்கமும் இன்றி மிகச் சரளமாக மனம் திறந்து பேசினார்.
ஒர் ஆசானுக்குரிய கண்டிப்பையும்,
ஒரு தந்தைக்குரிய பாசத்தையும் அவர் பேச்சில் காணமுடிந்தது சிறப்பு.

என்னுடைய வனநாயகனை கவிஞரிடம் வழங்கியபோது எடுத்தபடம் இங்கே உங்களுக்காக.

"ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம்.." எனும் பாடல் மூலம் நம்மை வசீகரித்த கவிஞர் வசிப்பது சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராஜராஜன் தெரு என்பது இங்கே கூடுதல் தகவல்.

#மு.மேத்தா

3 comments:

  1. புதுகவிதையில் புயலைப் புகுத்தியவர்/

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். இப்படி பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் தான். "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குது" என திரைப்பாடல் எழுதியும் புதுமை செய்தவரும் கூட.

      Delete