Tuesday, December 27, 2022

வனநாயகன் குறித்து-25 (வசீகரமான தலைப்போடு அறுசுவை)

வனநாயகன்(மலேசிய நாட்கள்) குறித்து தனது வாசிப்பனுவத்தைப் பகிர்ந்த தோழர் அப்துல் காதர் (சென்னை) அவர்களுக்கு மிக்க நன்றி !

//

வாழ்க வளமுடன்.

அன்புத் தோழர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்களின் வசீகரமாக வனநாயகன் வாசித்தேன். சிறப்பான நாவல்.இது குறித்தான கருத்துப் பறிமாற்றம் செய்ய போதுமான அவகாசம் கிட்டவில்லை.

நாவல் வாசித்து நாட்கள் பலவாகி இருந்தாலும், அலுப்பு தட்டாத உங்களின் மொழிநடையாலும், இதுவரை நான் அறியாத பணி களத்தை விவரித்த அழகில், சுஜாதா( ரங்கராஜன்) க்குப் பிறகு சிலிக்கான் தொழில்நுட்ப பணிகளில் இப்படியும் வகையுண்டா? எனும் ஆச்சரிய மேலீட்டாலும், அத்துடன் கலகலப்பான க்ரைம் கலந்து விறுவிறுப்பு கூட்டியதாலும், இரண்டே நாள் அவகாசத்தில் படித்து முடித்து விட்டேன் என்றாலும், தொலைதூர அலுவலகப் பணிகளாலும், விடுமுறை; ஓய்வு எனும் அடிப்படையில் இங்கு வந்ததாக மனைவியும் மகளும் கருதியதாலும் விட்டு விட்டு பயணங்கள் என பொழுது கழிந்ததால், பொருத்தமான கால அவகாசம் கிட்டவில்லை.


ஒராங் உட்டான்(ஓராங் ஊத்தான்) என சாதாரணமாக அறியப்பட்டுள்ள ஓர் உயிரினத்தின் வலிகளையும், அதனைத் தமிழ்ப்படுத்தி வசீகரமான தலைப்பிட்டதிலும் தொடங்கி, துறை சார்ந்த குறிப்புகள் அதனுடன் பின்னிப் பிணைந்த தொழிற்போட்டிகள், எல்லாவற்றையும் மீறிய அரசியல் குறுக்கீடுகள் அல்லது தலையீடுகள் அத்துடன் அளவான ரசபாசமான காதல் உணர்வுகள் என கலந்துகட்டி அறுசுவை விருந்து படைத்து விட்டீர்கள். வாழ்த்துகள்.

பயணக்கட்டுரை போல் இல்லாமல், கதைகளத்தின் ஊடே மலேசிய சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தி அவற்றைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள். நல்லவேளையாக இந்நாவலை என் மனைவி படிக்கவில்லை. படித்து முடித்தால், லிஸ்டில் மலேசியாவும் சேர்ந்து விடும்.(ஏற்கனவே சிங்கப்பூர் லிஸ்டில் உள்ளது)...

//

வனநாயகன் – மலேசிய நாட்கள் (நாவல்)
ஆரூர் பாஸ்கர்,

கிழக்கு பதிப்பகம்,
பக்கங்கள் 304, விலை ரூ.275

Friday, December 23, 2022

ஜெஸி (எ) ஜெஸிகா கிங் - இப்போது அச்சு நூலாக

மகிழ்ச்சியான செய்தி !! "ஜெஸி (எ) ஜெஸிகா கிங்"  அச்சுநூலாக வருகிறது.  ஜீரோ டிகிரி பதிப்பகம் இதை ஜனவரி புத்தகத் திருவிழாவுக்கு திட்டமிட்டிருக்கிறது. முகப்பு அட்டைப் படமும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய அட்டைப் படத்தை நெகிழன் வடிவமைத்திருக்கிறார்.



#jessie


Wednesday, December 21, 2022

வனநாயகன் குறித்து-24 (ஐடி துறை பற்றி பேசும் நவீன புதனம்)

"வனநாயகன்(மலேசிய நாட்கள்)" குறித்து மணிகண்டன் அமேசான்  தளத்தில் பகிர்ந்த கருத்து..










Saturday, December 10, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(5)

வாசக நண்பர்களின் வாசிப்பனுபவம் தொடர்கிறது...

இதைப் பகிர்ந்த ராஜா திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றி !

Read Jessi (India)

Read Jessi (USA)

Tuesday, December 6, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(4)

அமேசான் கிண்டில் வாசகர்களின் வாசிப்பனுபவம் தொடர்கிறது.

Monday, December 5, 2022

என்.சொக்கன்

ஓரு மொழிக்கு ஆதரவான, ஆரோக்கியமான சூழல் நிலவுகிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள நாம் அந்த மொழியில் வெளியாகும் புத்தகங்களைச் சற்று கூர்ந்து கவனித்தாலே புரிந்துவிடும். 

அந்த வகையில், நண்பர் என்.சொக்கன் தமிழில் இந்தத் தலைமுறைக்குத் தேவையான நூல்களைத் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறார். புனைவு, தன்னம்பிக்கை, வரலாறு, நிறுவன வரலாறு, சிறார் இலக்கியம் போன்ற துறைகளில் 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.


இவருடைய எழுத்து திருகுகள் அற்ற தெளிவான ஒன்று. இவரைப்போல தமிழில் இந்தக் களங்களில்  எழுதிக் குவித்த  இளம் எழுத்தாளர்கள் யாரும் இதுவரை என் கண்ணில் படவில்லை.

இவருடைய நூல்களை எளிதாக கிண்டிலில் வாங்க முடிந்தாலும் அச்சு நூல்களைத் தேடித்தேடிதான் வாங்க வேண்டி இருந்தது. அந்தக் குறை தீரும் வகையில் இவருடைய எல்லா நூல்களையும் ஜீரோ டிகிரி மறுபதிப்பாக கொண்டு வருவது வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

இந்த வாய்ப்பை நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதுவரை வந்த அவருடைய நூல்களுக்கான இணைப்பு கீழே..

https://www.zerodegreepublishing.com/collections/n-chokkan-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D