நியூஜெர்சியில் 2026, ஜூலை 2 முதல் 4 வரை பிரம்மாண்டமாக நடைபெற்ற 39-வது பெட்னா(FETNA) பேரவை விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்வில் பெட்னா இலக்கியகுழு இரண்டு இணை அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த இணை அமர்வுகளில் கவிஞர் பெருந்தேவி, கவிஞர் சாம்ராஜ், எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் மற்றும் தமிழ்நதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
ஜூலை 3-ம் தேதி வெள்ளி அன்று நடந்த அமர்வு சமகாலத் தமிழ் இலக்கியம் - துவக்கமும், திசைகளும், போக்குகளும் என்ற தலைப்பில் அமைந்திருந்தது.
அடுத்து பேசிய எழுத்தாளர் தமிழ்நதி, "புலம்பெயர்ந்தோர் இலக்கியம் – ஒரு பார்வை" என்ற தலைப்பில், புலம்பெயர் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் தமிழ் இலக்கியத்தின் தனித்துவம், வளர்ச்சி மற்றும் அதன் சமகாலப் பரிமாணங்கள் குறித்து பேசினார். அது ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மேல் வைக்கப்படும் பல கேள்விகளுக்கு பதில் சொல்வது போலவும் அமைந்தது. இறுதியாக பேசிய எழுத்தாளர் சாம்ராஜ், "தமிழ்ச் சிறுகதைகளும் பகடியும்" என்ற தலைப்பில் தமிழ்ச் சிறுகதைகளில் பகடி எவ்வாறு கையாளப்பட்டுள்ளது, அதன் இலக்கியப் பங்கு மற்றும் சமூக விமர்சனத் தன்மை குறித்து உரையாற்றினார்.
இவர்களுடைய அனைத்து உரைகளும் சமீபத்தில் நான் கேட்ட உரைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக செறிவானதாக இருந்தது. குறிப்பாக, புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்தும் அவருடைய காஞ்சனை சிறுகதை குறித்தும் பேசியது தனது நெடுநாள் கனவு என பெருந்தேவி நேர்பேச்சில் குறிப்பிட்டார். இதில் இருந்து அதற்கான உழைப்பை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது.
சாம்ராஜ் தனது உரை நடிகர் கமலுடைய திரைப்பகடி என்பது மலையாள பட தாக்கதில் வந்தது, தமிழ் திரையில் மதுரைத் தமிழை பகடியாக்கி புதியபாதை கண்டவர் வடிவேலு, பொதுவாக சுயபகடி என்பது தமிழி்ல் குறைவு அதனால்தான் பகடி நிறைந்த எழுத்துகள் வருவதில்லை. இலக்கியம் விடுதலைக்கானது, பகடி அதைத் தரவல்லது என்பது போன்ற பல கூர்மையான அவதானிப்புகளால் நிறைந்திருந்ததும் சிறப்பு.
.png)
No comments:
Post a Comment