Sunday, August 17, 2014

துட்டுக்கு பாட்டு - கவிஞர் வாலி

தமிழ் திரைப்பட பாடல்கள் "மெட்டுக்கு பாட்டா? , பாட்டுக்கு மெட்டா?"
என்பது பலகாலமாக தமிழ் சூழலில் கேட்கப்படும் பழைய கேள்வி.
இதற்கு "துட்டுக்கு பாட்டு " என்றார் கவிஞர் வாலி ஒருமுறை .

தற்போது, இந்த கேள்வியை யாரும் பாடலாசிரிடம் கேட்பது இல்லை.
அப்படியே கேட்டாலும் பதில் என்னவாக இருக்கும் என்பதை முன்பே அறிந்ததால் இருக்கலாம்.

பாடலுக்கு மெட்டு என்பதே மிக அரிதான ஒன்றாயிருக்கிறது.
திரை ஜாம்பவங்களாக பல ஆயிரம் பாடல்களை எழுதிய  வைரமுத்து, வாலி போன்றவர்களின் சில பாடல்கள் மட்டுமே மெட்டமைத்ததாக இருக்கும். இது காலத்தின் கட்டாயமே.

யாரோ சொன்னதுபோல, இந்தியாவில் கம்யூஸ்ட்டுகள் இருக்கிறார்கள், ஆனால் கம்யூனிஸம் இல்லை.  அது போல தமிழ்  பாடல்கள் இருக்கின்றன, தமிழ் இசை இல்லை. மேற்கத்‌திய இசைக்கும், வாத்‌தியங்களுக்கும் நடுவே தமிழ் வரிகள் நிரப்படுகின்றன.

தமிழ் பாடலாசிரியர்கள் இந்த சவால்களை தாண்டி நல்ல கருத்தையும், கவித்துவமான விடயங்களையும் தர முயற்சிக்கிறார்கள். பாராட்டுக்கள்!.

வட்டத்திற்குள் வண்ணம் தீட்டுவது போல,  பாடலாசிரியரின் வேலை அவ்வளவு எளிதானது அன்று.

மேலும், திரை பாடல் என்பது ஒரு கூட்டு முயற்‌சி. இசையமையப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் ஒலிப்பதிவாளர் என அனைவரும் சேர்ந்தே
ஒரு பாடலுக்கு உயிர் தருகின்றனர். மேலும் இந்த அணிக்கு வணிகரீதியான அழுத்தங்கள் வேறு.

இவ்வளவு கஷ்டப்பட்டு வரும் பாடலை கேட்டு நாம் "மொக்கை" என நொடியில் தீர்மானித்து விடுகிறோம்.

"என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியில் இருந்து.
"பெண் பார்த்தாய்" எனும் தலைப்பில் உள்ள கவிதையின் ஒரு பகுதியை நண்பர் ரவி இசை அமைத்து பாடலாக்க முயற்ச்சித்துள்ளார்.

" பெண் பார்த்தாய்,
நீ பெண் பார்த்தாய்,
பெண்ணையே பார்க்குமுன்
ஜாதகம் பார்த்தாய்,
பயோடேட்டா பார்த்தாய்,
நியூமராலஜியும் சேர்த்தே பார்த்தாய்! " 
......


இங்கே ஓலி வடிவில் பாடலை
கேட்டு மகிழுங்கள்:




இங்கே முழு கவிதையை  ஓலி வடிவில்
கேட்டு மகிழுங்கள்:




என் ஜன்னல் வழிப் பார்வையில்:

Facebook fan page:www.facebook.com/ejvpbook


Please share your feedback.




















No comments:

Post a Comment