வணக்கம், நீங்கள் ஒரு Bachelorரா?
ஆமாம் எனில் வாழ்த்துக்கள்!!. இல்லை எனில் நீங்கள் ஒன்றும் பெரிதாக
இழந்து விடவில்லை. ஏனெனில் நீங்களும் அங்கிருந்துதான் (பேச்சிலராக) வந்திருப்பீர்கள்.
நீங்கள் ஒரு பேச்சிலராக இருந்தாலும் ரொம்பவும் மகிழத் தேவை இல்லை.
ஏனெனில் நீங்களும் ஒரு நாள் மணம் புரியப் போகிறவர்தான். :)
"எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது"
-கீதாசாரம் போல ரொம்ப குழப்பமா இருக்கா? சரி விடுங்க..
ஒரு தகவல் இந்தியாவின் மக்கள் தொகையில் 50% பேர் 25 வயதிற்க்கு உட்பட்டவர்களாம். பேச்சிலர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக
இருப்பதாக எடுத்துக் கொண்டால் இந்தியா ஒரு மகிழ்ச்சியான
நாடே. அதையும் விடுங்க.
சமீபத்தில் படித்த கீழ்க்கண்ட வாசகமே, இந்த கட்டுரையின் தொடக்கம்.
"இளைஞர்களே, உலகை மாற்ற வேண்டும் என நினைத்தால் கல்யாணத்துக்கு முன்னாடியே பண்ணிடுங்க. அதுக்கப்புறம் உங்களால டிவி சானலை கூட மாத்த முடியாது"
இதை படித்ததும், பேச்சிலர் பற்றிய என்னுடைய இந்த கவிதை ஞாபகம் வந்தது.
தலைப்பு: பேச்சிலர் (பேச்சு இலர்), "என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியில் இருந்து.
Bachelor ஆன நான் பேச்சிலர் ஆகிறேன்,
உன் அழகு முகம் பார்க்கையில்!
மூளை இருந்தும் முட்டாள் ஆகிறேன்,
உன் கயல் விழி பேசும் மொழி புரியாமல்!
மொழி ஆய்வாளர்களே,
உலக மொழிகளின் எண்ணிக்கையில்
ஒன்றைக் கூட்டிக்கொள்ளுங்கள்,
என்னவள் பேசும்
விழி மொழியையும் சேர்த்து!
ஆராய்ச்சியாளர்களே,
உலகப் புரியாத புதிர்களின் எண்ணிக்கையில்
ஒன்றைக் கூட்டிக்கொள்ளுங்கள்,
என்னவள் காட்டும்
கடைக்கண் பார்வையையும் சேர்த்து!
இங்கே ஓலி வடிவில் கேட்டு மகிழுங்கள்:
முடிவா பேச்சிலர்கள் எல்லாரும் சந்தோஷமாகவும் இருக்கிறதில்லை,
கல்யாணமான எல்லாரும் சோகமாவும் இருக்கிறதில்லை.
மனசு தான் எல்லாத்துக்கும் காரணம்னு சாலமன் பாப்பையா
பட்டிமன்றம் மாதிரி முடிச்சுடுவோம்.
**
என் ஜன்னல் வழிப் பார்வையில்:
Facebook fan page:www.facebook.com/ejvpbook
No comments:
Post a Comment