"...என்னோடு வா வீடு வரைக்கும், என் வீட்டை பார் என்னைப் பிடிக்கும்... !! "
இது கவிஞர் தாமரை எழுதிய ஒரு திரைப்பாடல். இந்தப் பாடலை ஒருமுறை மேற்கோள் காட்டி பேசிய கவிஞர் கபிலன் வைரமுத்து இதுபோன்ற வரிகளை ஒரு பெண் கவிஞரால் மட்டுமே எழுத முடியும் என வியந்திருந்தார். அதுபோல பெண்களின் ஆழ்மன ஓட்டத்தை அவர்களால் மட்டுமே மிகச் சிறப்பாக வெளிக் கொணர முடியும் என்பதை சமீபத்தில் எழுத்தாளர் தமிழ்நதியின் பார்த்தினியம் நாவலை (புதினம்) வாசிக்கும் போது உணர்ந்தேன்.
தமிழில் திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் . இங்கே வாசிப்புக் குறைவு அல்லது அறவே இல்லை எனும் குற்றச்சாட்டு வெகுநாட்களாக முன் வைக்கப்பட்டாலும் தமிழ் எழுத்துலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு இலக்கிய நடைகளில் சிறப்பான படைப்புகள் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் வரலாற்றைப் புனைவாக்கி படைக்கப்பட்ட தமிழ்நதியின் "பார்த்தினியம்" குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடிக்கிறது.
1983 முதல் 1990 காலகட்டத்தில் இலங்கையில் தான் நேர்முகமாகக் அனுபவித்ததை, கேட்டதை உணர்ந்ததை நாவலாக்கி இருப்பதாக சொல்லும் எழுத்தாளர் தமிழ்நதியின் முன்னுரையுடன் கதை தொடங்குகிறது.
அதாவது ஈழப்போராட்டத்தில் பெருமளவு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் தொடங்கிய 80களில் தொடங்கி இந்திய இராணுவம் ஈழத்தை விட்டு வெளியேறிய காலப்பகுதியை ஒட்டியதாக நிறைவுறுகின்றது. கதை மாந்தர்களான பரணி, வானதி போன்ற சாமானிய மனிதர்களின் மீது திணிக்கப்பட்ட யுத்தம் எப்படி அவர்களின் வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கியது என்பதை நாவல் சித்தரிக்கிறது. இங்கே படைப்பின் உள்ளடக்கத்தைப் பற்றி விரிவாக பேசுவதைவிட இந்தப் படைப்பின் அற்புதமான மொழி ஆளுமையையும் உணர்வுப்பூர்வமான மனவெளிப்பாட்டையும் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது. தமிழ்நதியில் தடையில்லாத அடர்த்தியான மொழி நடையில் பல தருணங்கள் வாசித்த பல மாதங்களுக்கு பின்பும் நம்மை உள்ளெழுச்சிக் கொள்ள செய்கின்றன.
குறிப்பாக மழை பெய்துகொண்டிருக்கும் ஒரு பின்அந்தி நேரத்தில்
நாயகன் பரணி நீண்ட பிரிவுக்கு பிறகு தான் காதலிக்கும் வானதியைச் சந்திக்கும் காட்சி மிக நேர்த்தியானது. நாம் இதுவரைப் பார்த்த திரைப்படங்கள் கூட காட்சிப்படுத்தாத அற்புதமான தருணம் அது.
அதுபோல சங்ககால இலக்கியங்களில் வரும் இயற்கைக்காட்சிகளை
நினைவுபடுத்தும் வகையில் மண் வாசனையோடு மரங்கள், செடி,கொடிகள், பூக்கள் பற்றிய சிறப்பான விவரணைகளுடன் 1980களின் இலங்கை நம்
முன்னே அழகாக விரிகிறது. தெளிவான நீரோட்டமாக செல்லும் இந்த நல்ல கலைபடைப்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொன்று இதன் ஆற்றல் வாய்ந்த கவித்துவமான மொழி ஆசிரியரை நல்ல கவிஞராகவும் அடையாளம் காட்டுகிறது. அதுபோல பார்த்தினியத்தில் தமிழ்சொற்களின் பயன்பாடு என ஆய்வுக்கட்டுரை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் இன்று புழக்கத்தில் இல்லாத பலநூறு தமிழ்சொற்களைக் கையாண்டிருக்கிறார். உலங்குவானவூர்தி (ஹெலிகாப்டர்), மிழற்றல், அடவு, நுளம்பு, ஆதுரம், கனகாலம், பகடிவதை, அருந்தல் என அந்தச் சொற்பட்டியல் நீளுகிறது. இதையெல்லாம் வாசிக்கும்போது சிறுவயதில் டிராக்டர்களை உழவியந்திரம் எனச் சொல்லிக் கேட்ட நாட்களை நினைத்துக்கொள்கிறேன்.
கதைக்களம் ஈழம் என்பதால் இந்தக் கலைப்படைப்பை சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒதுக்குவதாக அறிகிறேன். மாறாக
இது உள்நாட்டுப் போரினால் அலைகழிக்கப்பட்ட இளம்காதலர்களின் உணர்ச்சிகரமான காதல் கதை எனும் நோக்கில் வாசித்தாலும் சிறப்பே.
தலைப்பு: பார்த்தீனியம்
ஆசிரியர்: தமிழ்நதி
பதிப்பகம்: நற்றிணை
பக்கங்கள்: 512
விலை: ரூ. 450
இது கவிஞர் தாமரை எழுதிய ஒரு திரைப்பாடல். இந்தப் பாடலை ஒருமுறை மேற்கோள் காட்டி பேசிய கவிஞர் கபிலன் வைரமுத்து இதுபோன்ற வரிகளை ஒரு பெண் கவிஞரால் மட்டுமே எழுத முடியும் என வியந்திருந்தார். அதுபோல பெண்களின் ஆழ்மன ஓட்டத்தை அவர்களால் மட்டுமே மிகச் சிறப்பாக வெளிக் கொணர முடியும் என்பதை சமீபத்தில் எழுத்தாளர் தமிழ்நதியின் பார்த்தினியம் நாவலை (புதினம்) வாசிக்கும் போது உணர்ந்தேன்.
தமிழில் திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் . இங்கே வாசிப்புக் குறைவு அல்லது அறவே இல்லை எனும் குற்றச்சாட்டு வெகுநாட்களாக முன் வைக்கப்பட்டாலும் தமிழ் எழுத்துலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு இலக்கிய நடைகளில் சிறப்பான படைப்புகள் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் வரலாற்றைப் புனைவாக்கி படைக்கப்பட்ட தமிழ்நதியின் "பார்த்தினியம்" குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடிக்கிறது.1983 முதல் 1990 காலகட்டத்தில் இலங்கையில் தான் நேர்முகமாகக் அனுபவித்ததை, கேட்டதை உணர்ந்ததை நாவலாக்கி இருப்பதாக சொல்லும் எழுத்தாளர் தமிழ்நதியின் முன்னுரையுடன் கதை தொடங்குகிறது.
அதாவது ஈழப்போராட்டத்தில் பெருமளவு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் தொடங்கிய 80களில் தொடங்கி இந்திய இராணுவம் ஈழத்தை விட்டு வெளியேறிய காலப்பகுதியை ஒட்டியதாக நிறைவுறுகின்றது. கதை மாந்தர்களான பரணி, வானதி போன்ற சாமானிய மனிதர்களின் மீது திணிக்கப்பட்ட யுத்தம் எப்படி அவர்களின் வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கியது என்பதை நாவல் சித்தரிக்கிறது. இங்கே படைப்பின் உள்ளடக்கத்தைப் பற்றி விரிவாக பேசுவதைவிட இந்தப் படைப்பின் அற்புதமான மொழி ஆளுமையையும் உணர்வுப்பூர்வமான மனவெளிப்பாட்டையும் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது. தமிழ்நதியில் தடையில்லாத அடர்த்தியான மொழி நடையில் பல தருணங்கள் வாசித்த பல மாதங்களுக்கு பின்பும் நம்மை உள்ளெழுச்சிக் கொள்ள செய்கின்றன.
குறிப்பாக மழை பெய்துகொண்டிருக்கும் ஒரு பின்அந்தி நேரத்தில்
நாயகன் பரணி நீண்ட பிரிவுக்கு பிறகு தான் காதலிக்கும் வானதியைச் சந்திக்கும் காட்சி மிக நேர்த்தியானது. நாம் இதுவரைப் பார்த்த திரைப்படங்கள் கூட காட்சிப்படுத்தாத அற்புதமான தருணம் அது.
அதுபோல சங்ககால இலக்கியங்களில் வரும் இயற்கைக்காட்சிகளை
நினைவுபடுத்தும் வகையில் மண் வாசனையோடு மரங்கள், செடி,கொடிகள், பூக்கள் பற்றிய சிறப்பான விவரணைகளுடன் 1980களின் இலங்கை நம் முன்னே அழகாக விரிகிறது. தெளிவான நீரோட்டமாக செல்லும் இந்த நல்ல கலைபடைப்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொன்று இதன் ஆற்றல் வாய்ந்த கவித்துவமான மொழி ஆசிரியரை நல்ல கவிஞராகவும் அடையாளம் காட்டுகிறது. அதுபோல பார்த்தினியத்தில் தமிழ்சொற்களின் பயன்பாடு என ஆய்வுக்கட்டுரை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் இன்று புழக்கத்தில் இல்லாத பலநூறு தமிழ்சொற்களைக் கையாண்டிருக்கிறார். உலங்குவானவூர்தி (ஹெலிகாப்டர்), மிழற்றல், அடவு, நுளம்பு, ஆதுரம், கனகாலம், பகடிவதை, அருந்தல் என அந்தச் சொற்பட்டியல் நீளுகிறது. இதையெல்லாம் வாசிக்கும்போது சிறுவயதில் டிராக்டர்களை உழவியந்திரம் எனச் சொல்லிக் கேட்ட நாட்களை நினைத்துக்கொள்கிறேன்.
கதைக்களம் ஈழம் என்பதால் இந்தக் கலைப்படைப்பை சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒதுக்குவதாக அறிகிறேன். மாறாக
இது உள்நாட்டுப் போரினால் அலைகழிக்கப்பட்ட இளம்காதலர்களின் உணர்ச்சிகரமான காதல் கதை எனும் நோக்கில் வாசித்தாலும் சிறப்பே.
தலைப்பு: பார்த்தீனியம்
ஆசிரியர்: தமிழ்நதி
பதிப்பகம்: நற்றிணை
பக்கங்கள்: 512
விலை: ரூ. 450
மேலே உள்ள குறிப்பு 2018-இல் எழுதியது.
No comments:
Post a Comment