Sunday, May 12, 2019

ஆஸ்திரேலிய நெருக்கடி

ஆஸ்திரேலியா சமீப காலமாக வரலாறு காணாத  மோசமான காலநிலை மாற்றத்தைச்  சந்தித்துக்கொண்டிருக்கிறது.

தெற்கே தாஸ்மேனியாவில் கடுமையான வறட்சியால் ஏற்பட்ட  காட்டுத்தீயில் பல லட்சம் ஏக்கர் மரங்கள் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. வடக்கே குயின்ஸ்லாந்தில் வந்த பெரு வெள்ளத்தால் 5 இலட்சம் கால்நடைகள் பலியாகி இருக்கின்றன.  அதுபோல முர்ரே டார்லிங் ஆற்றில் ஆக்ஸிஜன் குறைபாட்டால் 1 மில்லியன் மீன்கள் வரை செத்து மடிந்தன
எனும் இந்த அவலப்பட்டியல் நீள்கிறது.

கடும் வெப்பத்தால் அணைக்கட்டுகளில் நீர் வற்றி மண்ணின் ஈரப்பதம்
சுத்தமாக குறைந்து தானியம், மாமிசம் என உணவு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.  மோசமான  இந்தப் பருவநிலை மாற்றத்தால்  அரசு மிகப்பெரிய பெருளாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதனால் எதிர்வரும் (18,மே,2019) ஆஸ்திரேலிய  தேர்தலில் காலநிலை மாற்றம் பேசுபொருளாகி இருக்கிறது என்கிறார்கள். இந்தியாவில் நாம் இதையெல்லாம் வெளிப்படையாக பேசாவிட்டாலும் புவிவெப்பமயமாதலால்
(global warming) ஏற்படும் இந்தப் பருவநிலை மாற்றம் பூமிப்பந்தின் ஒவ்வொரு
துகளையும் பாதிக்கத்தான் செய்திருக்கிறது.

#climatechange
#புவிவெப்பமயமாதல்

3 comments:

  1. //இந்தியாவில் நாம் இதையெல்லாம் வெளிப்படையாக பேசாவிட்டாலும் புவிவெப்பமயமாதலால் (global warming) ஏற்படும் இந்தப் பருவநிலை மாற்றம் பூமிப்பந்தின் ஒவ்வொருதுகளையும் பாதிக்கத்தான் செய்திருக்கிறது.//
    ஆஸ்திரேலியாவில் தற்போது உலகம் வெப்பமாவதால் வரும் பாதிப்பு, இந்தியாவிலேயோ அதன் மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்கனவே பாதிப்பு.
    இந்தியாவை பெருமளவு பாதிக்கும் இந்திய நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை பற்றியே இந்தியாவில் பேசுவதில்லை. உலகம் வெப்பமாதல் பற்றியா கவலை கொள்ள போகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி வேகநரி.

      இந்தியா மக்கள்தொகையை வேறு விதமாக பார்க்கத் தொடங்கிவிட்டது. அதாவது இளைய தலைமுறை என்பது நாட்டின் சொத்து என்பதாகிவிட்டது. மேற்கு நாடுகளில் ஏற்படும் மனித ஆற்றல் பற்றாக்குறையை நம்மூர் ஆட்கள் நிரப்புவார்கள் என நம்புகிறார்கள்.

      இந்தியாவும், சைனாவும் உலகின் மிகப்பெரிய சக்திகள் அவர்கள் இயற்கை மேல் அக்கறை இல்லாமல் இருப்பது ஆபத்தான போக்கு..

      Delete