இந்தத் தொடரின் முந்தையக் கட்டுரையை (8) இங்கே வாசிக்கலாம்.
வழக்கமாக பேரவை விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு விழா மலர் அன்பளிப்பாக வழங்குவது மரபு. அந்தப் பேரவைவிழா மலரின் ஆசிரியர் குழுவில் இந்தஆண்டு உறுப்பினராக இருந்தேன். பேரவை மலருடன் பல ஆண்டுகள் தொடர்பிருந்தாலும் உறுப்பினராக மலர்க் குழுவுடன் இணைந்தது இதுவே முதல்முறை.
அதனால் பல மாதங்களாகவே விழா குழுவினருடன் தொடர்பில் இருந்தேன். சரியாக சொல்வதென்றால் இந்த ஆண்டு (2019) பிப்ரவரியில் இருந்தே அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. உலகின் பல நாடுகளில் இருந்து விழாவின் கருப்பொருளுக்கு ஏற்றவகையில் படைப்புகளை வரவேற்பது, தேர்வு செய்வது, பிழை திருத்துவது, நெறிமுறைகளைச் சரிபார்ப்பது என பல வேலைகள் இருந்தன.
இவற்றைச் செய்து முடிக்க உறுப்பினர்கள் அனைவரும் வாரம் ஒருமுறை தொலைபேசி பல்வழி இணைப்பில் சந்தித்தோம். பிறகு நாட்கள் நெருங்க நெருங்க அது வாரம் இருமுறை என்றுகூட ஆனது. குழு உறுப்பினர் எனும் வகையில் நான் இணைந்து செயல்பட்ட பல பணிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இரண்டு. ஒன்று சமூக வலைதளங்களில் பகிர மார்கெட்டிங் அணியுடன் இணைந்து ஃபிளையர்கள் தயார் செய்து பகிர்ந்தது. அடுத்தது தமிழில் சிறந்த 100 நூறு புத்தகங்கள் எனும் பட்டியல் தயாரிப்பை ஒருங்கிணைத்தது.
இந்தியாவில் இருந்து கிராபிக் வல்லுனர்கள் வடிவமைத்த பல ஃபிளையர்களில் சிறந்த இரண்டைத் தேர்ந்தேடுப்பது என்பது பாலுமகேந்திராவின் படங்களில் சிறந்த ஒளிப்பதிவைத் தேர்தெடுப்பது போல கடினமான வேலை இல்லை என்பதால், வந்த ஃபிளையர்களில் சிறந்த இரண்டை மட்டும் குழுவினரின் பார்வைக்கு அனுப்பி அவர்களின் ஒப்புதலைப் பெற்று வெளிச்சுற்றுக்கு அனுப்பினோம்.
அடுத்தது படிக்கவேண்டிய 100 தமிழ்ப்புத்தகங்களின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்யவேண்டும் என்ற போதே மலர்க்குழுவில் இருந்த
நாங்கள் அனைவரும் மலைத்தோம். தயாரிக்கும்போதும் கண்டிப்பாக அதன் கனத்தை அனைவரும் உணர்ந்தோம். விண்மீன்களில் சிறந்த நூறைத் தேர்தெடுப்பதுபோல அது சவாலான ஒன்றாகத்தான் இருந்தது.
முக்கியமாக தமிழில் சிறந்த நூறு புத்தகங்கள் எனும் போது திருக்குறள், சிலப்பதிகாரம் என்றில்லாமல் நவீன எழுத்துகளை அடையாளப்படுத்த நினைத்தோம். அதனால், கடந்த 100-120 ஆண்டுகள் எனும் வரையறையில் சிறப்பான படைப்புகளைத் தேர்ந்தேடுக்க முடிவுசெய்தோம். அதைப் புதினம் (50), கவிதை (25), புதினம் இல்லாதவை (25) என மூன்றாக பிரித்துக்கொண்டோம். இந்த வேலையில் எனது புனைவிலக்கிய பரிச்சயம் கண்டிப்பாக கைகொடுத்தது. சிறந்த கவிதைத் தொகுப்புகளை அடையாளம் காணும் முயற்சியில் மரியாதைக்குரிய நண்பர் கவிஞர் ஜெயதேவனும் உதவி செய்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும்.
புத்தகப் பட்டியல் -விழா மலரில் இருந்து...
முக்கியமாக இது தரவரிசைபட்டியல் இல்லை. மலர்க்குழுவின் ஒரு வழிகாட்டுதல் மட்டுமே என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் .
இந்தப் பட்டியல் வாசகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என நம்புகிறோம். இந்தப் பட்டியலில் விடுபடல்கள் இருக்க வாய்ப்பு உண்டு.
புதின (நாவல்) வரிசை எழுத்துரு வடிவில் கீழே

# | புத்தகம் | ஆசிரியர் |
1 | புயலிலே ஒரு தோணி | ப சிங்காரம் |
2 | ஒரு புளிய மரத்தின் கதை | சுந்தர ராமசாமி |
3 | கரைந்த நிழல்கள் | அசோகமித்திரன் |
4 | மோகமுள் | தி ஜானகிராமன் |
5 | சில நேரங்களில் சில மனிதர்கள் | ஜெயகாந்தன் |
6 | கோபல்ல கிராமம் | கி ராஜநாராயணன் |
7 | சாயாவனம் | சா கந்தசாமி |
8 | பொன்னியின் செல்வன் | கல்கி |
9 | உப்பு நாய்கள் | லக்ஷ்மி சரவணக்குமார் |
10 | ஆழி சூழ் உலகு | ஜோ டி குரூஸ் |
11 | வாடிவாசல் | சி சு செல்லப்பா |
12 | உப பாண்டவம் | எஸ் ராமகிருஷ்ணன் |
13 | விஷ்ணுபுரம் | ஜெயமோகன் |
14 | கரிப்பு மணிகள் | ராஜம் கிருஷ்ணன் |
15 | இரும்பு குதிரைகள் | பாலகுமாரன் |
16 | கோவேறு கழுதைகள் | இமையம் |
17 | ஸீரோ டிகிரி | சாரு நிவேதிதா |
18 | கடல்புரத்தில் | வண்ணநிலவன் |
19 | நாளை மற்றோரு நாளே | ஜி நாகராஜன் |
20 | வெக்கை | பூமணி |
21 | கிருஷ்ணபருந்து | ஆ மாதவன் |
22 | வானம் வசப்படும் | பிரபஞ்சன் |
23 | குருதிப்புனல் | இந்திரா பார்த்தசாரதி |
24 | சோளகர் தொட்டி | ச பாலமுருகன் |
25 | காவல் கோட்டம் | சு வெங்கடேசன் |
26 | எட்டுத்திக்கும் மதயானை | நாஞ்சில் நாடன் |
27 | பசித்த மானுடம் | கரிச்சான் குஞ்சு |
28 | சாய்வு நாற்காலி | தோப்பில் முகமது மீரான் |
29 | தரையில் இறங்கும் விமானங்கள் | இந்துமதி |
30 | கூளமாதாரி | பெருமாள் முருகன் |
31 | ஒருநாள் | க நா சுப்ரமணியம் |
32 | தலைமுறைகள் | நீல பத்மநாபன் |
33 | நாகம்மாள் | ஆர் ஷண்முகசுந்தரம் |
34 | அஞ்சலை | கண்மணி குணசேகரன் |
35 | புத்தம் வீடு | ஹெப்சிபா ஜேசுதாசன் |
36 | வாசவேஸ்வரம் | கிருத்திகா |
37 | ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் | தமிழவன் |
38 | வேள்வித்தீ | எம் வி வெங்கட் ராம் |
39 | சித்திரப் பாவை | அகிலன் |
40 | புதுமைப்பித்தன் கதைகள் | புதுமைப்பித்தன் |
41 | கமலாம்பாள் சரித்திரம் | ராஜம் அய்யர் |
42 | அகல் விளக்கு | மு.வ. |
43 | நைலான் கயிறு | சுஜாதா |
44 | அபிதா | லா சா ராமாமிர்தம் |
45 | நல்ல நிலம் | பாவை சந்திரன் |
46 | ரத்த உறவு | யூமா வாசுகி |
47 | மலரும் சருகும் | டி செல்வராஜ் |
48 | பிரதாப முதலியார் சரித்திரம் | மாயூரம் வேதநாயகம் பிள்ளை |
49 | கூகை | சோ தர்மன் |
50 | கருக்கு | பாமா |
அடுத்தப் பதிவு 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பற்றிய இறுதிப் பதிவாக இருக்கும்.