நண்பர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! . கடந்த ஆண்டு எனது 'அந்த ஆறு நாட்கள்' (புதினம்/நாவல்) அமெசான் கிண்டிலில் வெளியானது
உங்களுக்கு நினைவிருக்கலாம்.
நீங்கள் விருப்பப்பட்டது போல அந்தப் புத்தகம் இந்த ஆண்டு எழுத்து பிரசுரத்தின் (ஸீரோ டிகிரி பப்ளிஷிங்) வழியாக அச்சுப் புத்தகமாக வெளியாகிறது. தலைப்பை மட்டும் 'இர்மா- அந்த ஆறு நாட்கள்' எனக் கொஞ்சமாக மாற்றியிருக்கிறோம். வண்ணமயமான புதிய அட்டைப்படம் தந்திருக்கிறோம்.
பிறகு, நூலை மீண்டும் மீண்டும் வாசித்து பிழைகளைத் தேடி திருத்தம் செய்திருக்கிறோம். அதுபோல, நூலின் பின் அட்டையில் நூல் குறிப்பு, முன் அட்டையில் வாசகர்களின் ஒப்புதல்கள் மற்றும் மதிப்புரைகள் (endorsements and reviews ) போன்றவற்றையும் சேர்த்திருக்கிறோம். மற்றபடி, அதே உள்ளடக்கம். இது எனக்கு நான்காவது நூல்.
நவீன இலக்கியத்தின் பிதாமகர் எனப் போற்றப்படும் சி.சு.செல்லப்பா
தொடங்கிய ‘எழுத்து பிரசுரம்’ பெயரில் இந்த நூல் வெளிவருவதைப் பெருமையாக நினைக்கிறேன்.
அமெசான் மின்னூலாக வந்தபோது புத்தகத்தை வாசித்து உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஜனவரி புத்தகக் கண்காட்சியில் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். 'இர்மா...' இனி உங்கள் கைகளில்.
No comments:
Post a Comment