அதாவது ஒத்தத் துறையில் இணைந்து செயல்படுபவர்களைப் நாம் பேசுகிறோம். வைரமுத்து-ஏ.ஆர் ரகுமான் போன்ற வெற்றிக் கூட்டணிகள் என்பது வேறு.ஆனால், எழுத்தில் இரட்டையர்கள் என்றால் நமக்குச் சட்டென நினைவுக்கு வருபவரகள் சுபா மட்டுமே. நண்பர்களான சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் என இருவரும் தங்கள் பெயரின் முதல் எழுத்தை எடுத்து சுபா எனும் புனைப் பெயரில் கடந்த 40 ஆண்டுகளாக எழுதிவருகிறார்கள். மற்றபடி தமிழ் எழுத்துத்துறையில் இரட்டையர்களைச் சிரமப்பட்டுத்தான் தேட வேண்டியிருக்கிறது
எழுத்து என்பது தனிமையோடு தொடர்புடையதாலோ என்னவோ அது பெரும்பாலும் தனி ஆவர்த்தனமாகவே இருந்திருக்கிறது. ஆனால், ஆங்கிலத்தில் John Lennon & Paul McCartney போல பல இரட்டை பாடல் ஆசிரியர்கள் duo songwriters உலகப்புகழ் பெற்றிருக்கிறார்கள்.
அதுபோல நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் அமெரிக்க ஆசிரியர்களான கேத்லீன் ஓ’நீல் கியர் அவருடைய கணவருடன் இணைந்து முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அதுபோல மார்சியா முல்லர் மற்றும் பில் ப்ரோன்சினி (Marcia Muller and Bill Pronzini) எழுத்துலகில் உலகப்புகழ் பெற்ற இணை.

என்னைப் பொறுத்தவரை வாசகர்கள் விரும்பும் ஒரு நல்ல படைப்பைத் தர ஒத்த நடையுள்ள இருவர் இணை ஆசிரியர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இருவேறுபட்டத் தளங்களில் இயங்குபவர்களாகக் கூட இருக்கலாம். இப்படி, மேற்குலகில் பிரபலமான எழுத்தாளர்கள் கூட்டுசேர்ந்து புனைவு எழுதுவதை நாம் விட்டு விடுவோம். தமிழில் ஓரளவு பெயர் தெரிந்த எழுத்தாளர்கள் இணைந்து புனைவு ஏன் , நான்கு வரியில் ஒரு கட்டுரையைக் கூட எழுதமாட்டார்கள். அந்த அளவுக்கு ஒற்றுமை.
நான் இதையெல்லாம் எழுதக் காரணம் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அவர் தனது நண்பர் ராமசேஷன் எனும் கணினிப் பொறியாளருடன் இணைந்து ”நல்ல தமிழில் எழுதுவது எப்படி?” எனும் புத்தகத்தைக் கொண்டுவருகிறேன் என எழுதியிருந்தார். இலக்கணத்துக்கும் சாருவுக்கும் என்ன தொடர்பு எனக் கேட்பவர்களுக்கும் அவர் தனது தளத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார். வாசியுங்கள்.
இப்படிப் பிரபல எழுத்தாளர்கள் வளரும் எழுத்தாளர்களை உற்சாகமூட்டும் வகையில் இணையாசிரியராக சேர்ந்து எழுத முன்வந்திருப்பது நல்லதொடக்கம். ஓரளவு புத்தகத்தையும் இணையாசிரியரையும் சேர்ந்து பிரபலப்படுத்தும். இருவரும் வெற்றி பெற வாழ்த்துகள்!

எனது வாழ்த்துகளும்
ReplyDeleteHappy New Year
ReplyDeleteஅருமை
www.nattumarunthu.com
nattu marunthu kadai online
nattu marunthu online