Monday, January 25, 2021
CNN - லேரி கிங் (Larry King)
Thursday, January 21, 2021
அமெரிக்க அதிபர் லிங்கன் பதவியேற்றபோது...
Tuesday, January 19, 2021
ஆயுதமாகி இருக்கிறது...
இன்று சமூக ஊடகங்கள் ஓர் ஆயுதமாக மாறியிருக்கிறது (Weapoized) என்பதை உறுதி செய்வதுபோல் ஒரு நிகழ்ச்சி ஆந்திராவில் நடந்திருக்கிறது.
வரதட்சணை விவகாரத்தில் தனது இளம் மனைவியைப் பிரிந்த ஒருவர் கோபத்தில் தான் மனைவியுடன் அந்தரங்கமாக இருந்த போது எடுத்த புகைப்படங்கள்,
அதன் அடிப்படையில் கணவர் கைது செய்யப்பட்டு இப்போது விசாரணை நடக்கிறதாம். இத்தனைக்கும் அந்தப்
Monday, January 11, 2021
வெளிநாடு வாழ் பெற்றோர்களுக்கு
அமெரிக்கவாழ் பிள்ளைகளுக்கு வாரந்தோறும் தமிழ்வகுப்பு- எனும் பயணத்தில் நாங்கள் நான்காம் ஆண்டு எடுத்து வைத்திருக்கிறோம். "அ", "ஆ"என அச்சாரத்தில் தொடங்கிய இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக இன்று பிள்ளைகள் தமிழில் எழுதுவது, படிப்பது, பேசுவது மகிழ்ச்சியும், உற்சாகம் தருகிறது.
வெளிநாடு வாழ் பெற்றோர்களாகிய நாம் பேசி,பழகி, சிந்திக்கும் நமது தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு "இந்தா பிடி"- என நம்மால் சடாரென எடுத்துக் கொடுத்துவிட முடியாது. அப்படியே கொடுத்தாலும் அவர்கள் பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதே உண்மை.
ஏனென்றால், ஒரு மொழியைக் கடத்துவதில் பிள்ளைகள் வளரும்
சூழலுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. குறிப்பாக முற்றிலும் ஆங்கில மயமான மேற்கு நாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்குத் தாய்மொழியைத் தருவது என்பது மிகச் சவாலான ஒன்றுதான்.
அந்தச் சவாலான வேலையை நாம் சிரமப்பட்டு செய்துதான் ஆக வேண்டுமா என்ன ? ஆமாம், நமது மொழியை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவது என்பது நமது பண்பாட்டின் தொடர்ச்சி, நமது சிந்தனை மரபின் தொடர்ச்சி, அது நமது வாழ்வியல் மதிப்பீடுகளின் தொடர்ச்சி.... கூடவே, தமிழை நம்மிடம் கற்க்கும் பிள்ளைகள் தங்களுக்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு அதை அடுத்தத் தலைமுறைக்கும் கடத்துவார்கள் என்றும் நாம் நம்புகிறோம்.
அது மட்டுமல்லாமல், தமிழ் போன்ற ஒரு மொழியைப் பிள்ளைகள் கற்று சரளமாகப் பேசுவது, எழுதுவது, வாசிப்பது என்பது கண்டிப்பாக ஒரு திறமை தான். அந்தத் திறமை பிள்ளைகளின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும், ஞாபகசக்தியை அதிகரிக்கும், சிக்கல்களைத் தீர்க்கும் குணாதியங்கள் (problem solving skills) வளர்க்கும் என்கிறார்கள். "The limits of my language are the limits of my world" என்றார் Ludwig (லுட்விக்) எனும் ஆஸ்திரிய மெய்யியலாளர். அதனால், அவர்கள் அறிவு விரிவடைய வேணும் நம் பிள்ளைகளுக்குத் தாய்மொழியைக் கற்பிப்போம்.
இவையெல்லாம், நம் பிள்ளைகளைக் கண்டிப்பாக மற்ற வெளிநாட்டுப் பிள்ளைகளிடம் இருந்து தனித்துக் காட்டும் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.
Saturday, January 9, 2021
2020-இல் வாசித்த புத்தகங்களின் பட்டியல்
கடந்த ஆண்டு வீட்டில் இருந்த நேரம் அதிகம் என்பதாலோ என்னவோ முந்தைய ஆண்டுகளை விட கொஞ்சம் அதிகமாக இல்லை... இல்லை.. குறைவாகவே வாசித்திருக்கிறேன்.
அந்த நேரத்தையெல்லாம் சேர்த்து வைத்து புத்தகம் எழுத செலவழித்திருக்கிறேன் என்பதால் பெரிய வருத்தம் எதுவும் இல்லை.
இதோ 2020-இன் வாசிப்புப் பட்டியல்
- மாயக்குதிரை - தமிழ்நதி
- மெக்ஸிகோ-இளங்கோ
- கலாதீபம் லாட்ஜ்-வாசு முருகவேல்
- ராக்கெட் தாதா - ஜி. கார்ல் மார்க்ஸ்
- பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம்-மயிலன் ஜி
- உலகின் மிக நீண்ட கழிவறை- அகர முதல்வன்
- தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் - ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
- கொண்டல் (கஜா புயல் கடந்த தடம்) - ஷக்தி
- மரயானை-சித்துராஜ் பொன்ராஜ்
- முட்டாளின் மூன்று தலைகள் (சிறார் புத்தகம்)- எஸ். ராமகிருஷ்ணன்
- அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது- எஸ். ராமகிருஷ்ணன்
- Shame Nation - Sue Scheff (Forward by Monica Lewinsky)
- Cyberphobia- Edward Lucas
- Protecting your Children Online - Kimberly Ann Mccabe
- The Shallows -Nicholas Carr