சி.என்.என் (CNN)-இன் முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளர் லேரி கிங் (Larry King) கலிபோஃர்னியாவில் நேற்று காலமானர். அவருக்கு வயது 87.
20 ஆண்டுகளுக்கு முன்பு "Larry King Live" நிகழ்ச்சி வழியாக எனக்கு அறிமுகமான லேரி எனது மனத்துக்கு இறுதிவரை நெருக்கமானவராகவே இருந்தார். ஹாலிவூட் நடிக நடிகைகளைத் தவிர்த்து இந்த மண்ணில் காலடி எடுத்துவைக்கும் வரும் வரை அவரே எனக்கு அமெரிக்காவின் முகமாகத் தெரிந்தார். அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
அவருடைய "Larry King Live" , "ஒரே நெட்வொர்க்கில், ஒரே நபரால் தொடர்ச்சியாக ஓரே நேரத்தில் (ஸ்லாட்டில்) தொகுத்து வழங்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி" எனும் கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது.
60 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என ஊடகத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்ட அவருடைய நகைச்சுவை ததும்பும் வெளிப்படையான பேச்சு அனைவராலும் ரசிக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் அவருடைய ஆண்மை ததும்பும் குரலோடு அவருடைய தனிமுத்திரைகளான சஸ்பென்டர்களையும் (suspenders), துருத்திக் கொண்டிருக்கும் ஒலிவாங்கியையும் (microphone) வியந்து ரசித்திருக்கிறேன்.
இறுதி நிகழ்ச்சி அன்று அவர் சி.என்.என் பார்வையாளர்களுக்கு தந்த பிரியாவிடை மிகவும் நெகிழ்சியானது. இரண்டு நிமிடத்துக்கு குறைவான அந்தக் காணொளியைக் கீழே தருகிறேன். நேரம் கிடைத்தால் பாருங்கள்.
#RIPLarryKing #LarryKing #Talkshowhost
ஆழ்ந்த இரங்கல்
ReplyDelete