'ஸ்வீட் எடு கொண்டாடு' என்பது போல அமெரிக்க பள்ளி மாணவர்கள் மத்தியில் டிக்டாக் வழியாக ஒரு புதிய சவால் ஒன்று வைரலாகி உலாவுவதாக ஒரு இமெயில் அனுப்பி இருக்கிறார்கள்.
அதன்படி, மாணவர்கள் பள்ளிக்கு சொந்தமான பொருட்களை அடித்து உடைத்து துவம்சம் செய்வது இல்லை அவற்றைத் திருடிக் கொண்டு வருவது போன்ற காணொலிகளை எடுத்து பகிரவேண்டுமாம். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பள்ளி மாணவர்கள் பள்ளி கழிவறைகளின் கதவுகளை அடித்து உடைப்பது, அங்கிருக்கும் டாய்லட் பேப்பர்களை உருவி வீசுவது, பள்ளிகளில் இருந்து லேப்டாப்புகளைத் திருடிக் கொண்டு வருவது போன்ற வெறியாட்டங்களில் ஈடுபடுகிறார்களாம்.
இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டு அவர்கள் மேல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றிருக்கிறார்கள். கூடவே இதனால் ஏற்படும் நஷ்டத்துக்கு பெற்றோர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றிருக்கிறார்கள்.
தலைவலி. தரமான கல்வி அனைவருக்கும் இலவசம் என மாணவர்களை பள்ளிக்கு அழைத்தால் அவர்கள் செய்யும் வெறியாட்டத்தை எந்த விதத்தில் சேர்ப்பது. குறும்புத்தனத்துக்கும் ஒரு அளவு இருக்கிறது தானே. இவர்கள் எல்லாம் படித்த படிப்புக்கு என்ன மரியாதை செய்கிறார்களோ தெரியவில்லை.
முக்கியமாக, சிறுவயதில் வன்முறை இப்படிக் கொண்டாட்டமாவது என்பது சரியான அறிகுறி அல்ல. ஆபத்து.
#TikTokvandalism
Ohhh
ReplyDeletehttps://vannasiraku.blogspot.com/2019/11/blog-post_18.html