Sunday, March 20, 2022

இளையராஜாவுக்குக் கிடைக்காத அந்த வாய்ப்பு

இசை என்றால் இளையராஜா எனப் பேசப்பட்டாலும்  அவருடைய தமிழ் மொழி ஆளுமை என்பது வெளியில் பெரிதாக பேசப்படாத ஒன்றாக இருக்கிறது என்கிறார் கவிஞரும் பாடலாசிரியருமான யுகபாரதி (புத்தகம்; இசை அல்லது இளையராஜா-யுகபாரதி ).


அதாவது, புலவர்களே எழுத அஞ்சும் பல வெண்பாக்களை இளையராஜா  தளை,சீர் தட்டாமல் எழுதி பல புத்தகங்களாக வெளியிட்டு இருக்கிறார். பாடலுக்கு இசையமைக்கும் போதே பெரும்பாலும் பொருத்தமான சுண்டியிழுக்கும் முதல் அடியையும் சேர்த்து எழுதி விடுவார். செந்தமிழ் பாடல் வரிகளை வெகுஜன மக்களின் இரசனைக்கு ஏற்றாற் போல வழக்குமொழிக்கு மாற்றி எளிமைப்படுத்தி இருக்கிறார் என நீண்ட பட்டியல் இட்டிருக்கிறார்.

கூடவே,  புத்தகத்தில் அவர் அங்கலாய்த்து சொல்லும் ஒரு விசயம்.  இன்று ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகமும் எழுந்து நிற்கும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கோ செம்மொழிப் பாடலுக்கோ அவர் (ராஜா) இசையமைக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம் என்றும் அந்த வாய்ப்பை காலமோ அரசியலோ அவருக்கு  வழங்கியிருக்கலாம் என்கிறார் யுகபாரதி. 

அது போலோரு வாய்ப்பு இளையராஜாவுக்கு இனியேனும் அமையுமா எனத் தெரியவில்லை.

Book Reference. ISAI ALLADHU ILAYARAAJA (Tamil Edition by Yuga Barathi). Kindle Edition. 

No comments:

Post a Comment