தன்னுடைய தனித்துவமான தமிழாலும் இனிமையான குரலாலும் நம்மைக் கவர்ந்த இலங்கை வானொலி புகழ் பி.எச். அப்துல் ஹமீது அவர்களை நேரில் சந்தித்து பழகும் ஒரு வாய்ப்பு நியூயார்க்கில் (பெட்னா) அமைந்தது.
கொஞ்சம் யோசித்தால் என்னைத் தமிழை நோக்கி ஈர்த்ததில் இலங்கை வானொலியின் பங்களிப்பு என்பது எனது தமிழாசிரியர்களுக்கு உள்ள பங்களிப்புக்குச் சற்றும் குறைவு இல்லாத ஒன்று என்றே நினைக்கிறேன்.
அதிலும் குறிப்பாக அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் போன்றவர்களை என்னால் எளிதில் மறக்க முடியாது. அந்த வகையில், நான் தமிழில் எழுதிய முதல் வாசகர் கடிதமே இலங்கை வானொலிக்காக அதுவும் அப்துல் ஹமீது அவர்களுடைய நிகழ்ச்சிக்காகதான்.
கடந்தவாரம் அப்துல் ஹமீது அவர்களைச் சந்தித்து உரையாடியது , அவருக்கு என்னுடைய வனநாயனையும், அறத்துக்கு அப்பால் நூலையும் பரிசளித்தது எல்லாம் நான் சற்றும் எதிர்பாராமல் ஒரு கனவு போல நடந்திருக்கிறது.
வாழ்க்கைக்கு இதுபோல கனவுகளும், கற்பனைகளும் அவ்வப்போது தேவையாகத்தானே இருக்கிறது. :)
அருமையான சந்திப்பு.
ReplyDeleteதிரு அப்துல் ஹமீது, மறைந்த ராஜேஸ்வரி சண்முகம் எல்லோரையும் என் சிறு வயதில் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சந்தித்து விளையாடியும் இருக்கிறேன். அப்போது இலங்கையில் இருந்தேன். எங்கள் வீட்டிற்கு எதிர்த்தாற்போல்தான் ராஜேஸ்வரி சண்முகம் அப்போது குடியிருந்தார். அவருடன் மடியில் கூட அமர்ந்து விளையாடியிருக்கிறேன். நாங்கள் இந்தியா வந்த பிறகும் கூட அவருடன் தொடர்பு இருந்தது என் குடும்பத்தாருக்கு. அதன் பின் நாளடைவில் விட்டுப் போனது. அவர்தான் என்னை வானொலியில் கதை பாட்டு சொல்ல அழைத்துச் சென்றார்.
நானும் இவர்களின் தமிழால் மிகவும் கவரப்பட்டேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்
கீதா
ஓ. ஆச்சர்யமான தகவல். கொடுத்து வைத்தவர்தான் நீங்கள். உங்களுக்கு இயல்பாகவே தமிழ் ஆர்வம் இருப்பது வியப்பில்லை.
Deleteவாழ்த்துகள் !