Monday, June 19, 2023

நீ ஓட்டுவது BMW-காரா?

'ஃபேர்-அன்-லவ்லியின் (fair and lovely) பேரா

நீயும் நானும் வேறா

ஐந்துக்கு பின் ஆறா

நீ ஓட்டுவது பிம்-எம்-டபில்யூ (BMW) காரா ?'

என்பது போன்ற நாலு காமா சோமா பாட்டெழுதி கூட ஒருவர் இன்று  பிரபல பாடலாசிரியராகிவிட முடியும்.  ஆனால், இலக்கியத்தில் 30-ஆண்டுகளுக்கு மேலாக செறிவான நவீன கவிதைகளை  எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் தேவதேவன் போன்றவர்கள் புகழ்பெறுவது என்பது கானல் நீர்தான். அதுவும் வாசிப்பு அரிதாகி வரும் இந்தக் காலத்தில்.

அவரைப் போன்றவர்களுக்கு அரசியலும் சரியாக தெரிவதில்லை.பாவம்.

யார்  அந்த தேவதேவன்? அவருடைய கவிதை ஒன்று சொல்லமுடியுமா? என்பவர்களுக்கு அவருடைய 'ஒரு மரத்தடி நிழல் போதும்'  எனும் கவிதை கீழே...

ஒரு மரத்தடி நிழல் போதும்

உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்

வெட்டவெளியில் நீ நின்றால்

என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது


மேலும்

மரத்தடியில் நிற்கையில்தான்

நீ அழகாயிருக்கிறாய்

கர்ப்பிணிபெண்ணை

அவள் தாயிடம் சேர்ப்பதுபோல

உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்

 

மரங்களின் தாய்மை

முலை முலையாய் கனிகள் கொடுக்கும்

கிளைகளின் காற்று

வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்

 

மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்

பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்

வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே


          ஒரு மரத்தடி நிழல் தேவை

உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்

போவேன்.

 

2 comments:

  1. தேவதேவன் அவர்களின் கவிதை நன்றாக இருக்கிறது.

    நல்லவை எழுதினால் செல்லுபடியாகாது....நல்லவை யுட்யூபில் போட்டால் செல்வதில்லை அதுவே ஒரு நடிகர் நடிகையின் பெயர் போட்டு கூடவே ஒரு சம்பந்தமே இல்லாத உண்மையற்ற பரபரப்பான ஒரு வரியைச் சேர்த்து பதிவு எழுதினாலும், யுட்யூபில் காணொளி போட்டாலும் போகும் பாருங்க...லட்சம் லட்சமா வியூஸ்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதுதான் நிதர்சனமாக இருக்கிறது. ஆனால், நல்ல படைப்புகளும் பதிவுகளும் காலம் கடந்து நிற்கும். நன்றி !!

      Delete