Monday, June 12, 2023

சினிமா... சினிமா... சினிமா...

ஒரு காலத்தில் படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி  பலர் பேச்சினுடே குறள், ஓளவை முதுமொழி ஏன்  குறைந்த பட்சம் ஒரு பழமொழியையாவது மேற்கோள் காட்டி பேசுவது என்பது மிகச் சாதாரணம். சிலர் ஏகலைவன்,  கட்டை விரல், கண்ணகி, கர்ணன் என்றெல்லாம் புராண கதைகளை டக்கென சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆனால், இன்று அது போன்ற வழக்கங்கள் பெரும்பாலும் ஒழிந்து விட்டதாகவே நினைக்கிறேன்.  மாறாக, கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் உரையாடல்கள்  என்பது கொஞ்சம் தட்டையாகி அந்த இடத்தை சினிமா பிடித்துவிட்டதாக நினைக்கிறேன். அதாவது, வயது வித்தியாசமின்றி பேச்சுவழக்கில் ஒரு சினிமா காட்சியையோ அல்லது வசனத்தையோ மேற்கோள் காட்டி பேசாதவர்களே இல்லை என்ற நிலை வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, இளைய தலைமுறைக்கு சினிமாவைத் தொடாமல் எதையும் பேசவே முடிவதில்லை.  (தமிழ்புத்தகங்கள் !?- மூச்!) அந்த அளவுக்கு சினிமா வாழ்வில் புரையோடிக் கிடக்கிறது. இது முற்றிலும் உண்மை.


சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு. அது மிகைப்படுத்தப்பட்டக் கனவுலகம் என்ற மனநிலை முற்றிலுமாக மாறி விட்டது. மாறாக, திரைப்படம் என்பது இன்று சமூகத்தின் நிகழ்காலத்தைப் பேசும் ஒன்றாக தமிழர் வாழ்வோடு இரண்டற கலந்த ஒன்றாகி இருக்கிறது. அது நல்லதா..கெட்டதா? எனும் முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

#சினிமா_சினிமா_சினிமா

4 comments:

  1. உண்மை தான். புத்தக வாசிப்பு குறைந்து சினிமா, சமூகவலைதளம் ஆக்கிரமித்து வருவதால் இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ஒரு காரணம். காட்சி ஊடகம் பெருகிவிட்டது. வாசிப்பு என்பது மேம்படவில்லை. அது தேவையில்லை என்ற கருத்தும் நிலைபெறுகிறது.

      தங்களுடைய கருத்துக்கு நன்றி !!

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete