'நல்லவேளையாக உங்களுடைய வனநாயகன் நாவலை என் மனைவி படிக்கவில்லை' என்ற தலைப்போடு வந்த இமெயிலைப் பார்த்தபோது சட்டென , அடடா.. நாம ஒன்னும் அப்படி எழுதிவிடவில்லையே என்றே தோன்றியது.
ஆர்வத்தோடு உள்ளே நுழைந்து முழு குறிப்பைப் படித்தபோதுதான் அவர் சொல்ல வந்த விசயம் புரிந்தது. அந்தக் குறிப்பை அப்படியே கீழே கொடுத்துவிடுகிறேன். பாருங்கள்.
//'...உங்களுடைய வனநாயகன்(மலேசிய நாட்கள்) பயணக்கட்டுரை போல் இல்லாமல், கதைகளத்தின் ஊடே மலேசிய சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தி அவற்றைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள். நல்லவேளையாக இந்நாவலை என் மனைவி படிக்கவில்லை. படித்து முடித்தால், லிஸ்டில் மலேசியாவும் சேர்ந்து விடும்.( ஏற்கனவே சிங்கப்பூர் லிஸ்டில் உள்ளது)..' //
இப்படி வனநாயகன் (2017) நாவல் வெளியாகி 7 ஆண்டுகளைக் கடந்த பின்பும் மறக்கப்படாமல் தொடர்ச்சியாக வாசிக்கப்படுவது மகிழ்ச்சி. அது குறித்து நல்லவிதாமாக நாலு வார்த்தை சொல்வதும், எழுதுவதும் கூடுதல் மகிழ்ச்சி.
No comments:
Post a Comment