Saturday, April 13, 2024

சாட்ஜிபிடி-க்கு போட்டி - Perplexity.ai

சாட்ஜிபிடி (ChatGPT), மைக்ரோசாப்ட் கோ-பைலட்(Microsoft Copilot) போன்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-களுக்கு போட்டியாக 'பிர்ப்லக்ஸிட்டி '(Perplexity.ai)  வந்திருக்கிறது. வழக்கம் போல், 'யார் ஆரூர் பாஸ்கர் ?' என்ற கேள்வியைக் கேட்டபோது perplexity  அளித்த பதில் நிறைவளிக்கக் கூடியதாக இருந்தது.


கூடவே, எதை ஆதாரமாகக் கொண்டு நமக்கு பதில் தருகிறது என்பதற்கு source link-ஐயும் தருகிறது. நாம் கேட்ட கேள்விகளை வைத்து அடுத்து என்னென்ன கேள்விகளைத் தொடர்ச்சியாக கேட்கலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்குகிறது. இதனால் நாம் ஒரு விஷயத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக தெரிந்துகொள்ள வழி கிடைக்கிறது. 

சாட்ஜிபிடி-யின் செயல்திறனில் திருப்தி இல்லாதவர்கள் perplexity.ai -ஐ முயற்சி செய்து பார்க்கலாம். 

ஓ.. சொல்ல மறந்துவிட்டேனே... பிர்ப்லக்ஸிட்டி (perplexity, n) என்பதைத் தமிழில் குழப்பம் அல்லது  சிக்கலான, கடினமான சூழல் என  பொருள் கொள்ளலாம்.



No comments:

Post a Comment