வனநாயகன் குறித்து நண்பர் Saravanan Gnanasekaran மே, 2017-இல் முகநூலில் பகிர்ந்தது.
//
வனநாயகன் குறித்து நண்பர் Saravanan Gnanasekaran மே, 2017-இல் முகநூலில் பகிர்ந்தது.
//
நம்மூர் ஆட்கள் Google translation ஐ வைத்து மற்ற மொழி நூல்களை மொழிபெயர்ப்பு செய்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படியெல்லாம் குருட்டாம்போக்கில் பொதுப்படையாக சொல்லிவிட முடியாது. ஆனால், தமிழில் மொழிபெயர்ப்பு என்பது பலகீனமான ஒரு துறையாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அது மேம்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
பொதுவாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு வாசிப்பனுபவத்தோடு, நமது பண்பாட்டுக் கூறுகளோடு, நுட்பமான இலக்கிய நாட்டமும் இருக்கும் போது ஒரு படைப்பு மேம்படுகிறது.
இயந்திரத்தனமான மொழிபெயர்ப்பு செய்வது பயனற்ற ஒன்று.
உதாரணமாக 'அவனுக்கு குறிஞ்சி பூத்தது' என்ற ஒரு வரி வருகிறது இதை எப்படி ஒரு வெளிநாட்டவர் புரிந்து கொள்ளும்படி மொழிபெயர்ப்பது ? சொல்லுங்கள்.
அடுத்து, 'அவள் காய்சிய பால் போன்றவள்' எனும் வரியின் உள்ளர்த்தம் தமிழ் பண்பாட்டு தெரிந்தவர்களுக்குப் புரிந்த ஒன்று.
ஆனால், அதை தட்டையாக மொழிபெயர்த்து விட்டால்? அதன் உட்பொருள் மறைந்துவிடுமே ? என்ன செய்வது...
அடுத்து 'மூத்த மருமகனான அவனுக்கு மாமியார் வீட்டில் எப்போதும் பூரண கும்ப மரியாதைதான்'
இதையெல்லாம், தமிழில் இருந்து ஒரு இயந்திரம் மொழிபெயர்ப்பு செய்துவிடுமா என்ன ? செயற்கை நுண்ணறிவு மூழமாக இனி செய்யலாம். ஆனால், அதற்கு இன்னமும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
வால்மார்ட்(Walmart) -இல் வனநாயகன்
'இப்ப உங்க வனநாயகன் வால்மார்ட்டில்(Walmart) கிடைக்குதே...! ' என ஒரு அமெரிக்க நண்பி உள்பெட்டியில் வந்து அதிசயித்தார். 'அதிசயிக்கும் நீங்கள் 8-வது அதிசயம்' என அறுக்காமல் விசயத்தைக் கேட்டு தெரிந்துகொண்டேன்.
விசயம் இதுதான். அமெரிக்க வாசகர்கள் படித்து இன்புறும் வகையில் யாரோ வனநாயகன் (மலேசிய நாட்கள்) நாவலை வால்மார்ட் தளத்தில் $22 டாலருக்கு விற்பனை செய்கிறார்களாம்.
யாரும் அவ்வளவு கொடுத்து சிரமப்படவேண்டியதில்லை. அதில் பாதி விலைக்கே அமெரிக்காவின் எந்த மூலைக்கும் Media Mail-இல் நானே அனுப்பிவைப்பேனே.. எனச் சொல்லி அவரை அமைதிப்படுத்தினேன்.
வனநாயகன் வெளியாகி 7 ஆண்டுகளுக்குப் பின்பும் இப்படித் தொடர்ந்து வாசிக்கப்படுவது மகிழ்ச்சி.
மனத்தளவில் சோர்ந்து போகும்போதும், தளர்வடையும் போதும் அதுவே எனக்கு உற்சாகம் தரும் டானிக்.