நம்மூர் ஆட்கள் Google translation ஐ வைத்து மற்ற மொழி நூல்களை மொழிபெயர்ப்பு செய்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படியெல்லாம் குருட்டாம்போக்கில் பொதுப்படையாக சொல்லிவிட முடியாது. ஆனால், தமிழில் மொழிபெயர்ப்பு என்பது பலகீனமான ஒரு துறையாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அது மேம்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
பொதுவாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு வாசிப்பனுபவத்தோடு, நமது பண்பாட்டுக் கூறுகளோடு, நுட்பமான இலக்கிய நாட்டமும் இருக்கும் போது ஒரு படைப்பு மேம்படுகிறது.
இயந்திரத்தனமான மொழிபெயர்ப்பு செய்வது பயனற்ற ஒன்று.
உதாரணமாக 'அவனுக்கு குறிஞ்சி பூத்தது' என்ற ஒரு வரி வருகிறது இதை எப்படி ஒரு வெளிநாட்டவர் புரிந்து கொள்ளும்படி மொழிபெயர்ப்பது ? சொல்லுங்கள்.
அடுத்து, 'அவள் காய்சிய பால் போன்றவள்' எனும் வரியின் உள்ளர்த்தம் தமிழ் பண்பாட்டு தெரிந்தவர்களுக்குப் புரிந்த ஒன்று.
ஆனால், அதை தட்டையாக மொழிபெயர்த்து விட்டால்? அதன் உட்பொருள் மறைந்துவிடுமே ? என்ன செய்வது...
அடுத்து 'மூத்த மருமகனான அவனுக்கு மாமியார் வீட்டில் எப்போதும் பூரண கும்ப மரியாதைதான்'
இதையெல்லாம், தமிழில் இருந்து ஒரு இயந்திரம் மொழிபெயர்ப்பு செய்துவிடுமா என்ன ? செயற்கை நுண்ணறிவு மூழமாக இனி செய்யலாம். ஆனால், அதற்கு இன்னமும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment