Friday, May 13, 2016

தேர்தல் - அமேரிக்காவும் தமிழகமும்

 இந்தியாவில் மாநில தேர்தலுக்கு  தமிழகம் தயாராவது போல அமேரிக்காவிலும் நவம்பர் மாத ஜனாதிபதி  தேர்தல் சூடு பிடித்திருக்கிறது.

இங்கே  எல்லா அரசியல் தொலைக்காட்சி நிறுவனங்களும் இருபத்துநான்கு மணி நேரமும் தேர்தலை அலசிக் கொண்டிருக்கின்றன.

பொதுவாக எல்லாரும் ஆச்சர்யமாக பேசிக் கொண்டிருக்கும் ஓரு விஷயம் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி.
முழு நேர அரசியலுக்கு  வந்த ஓரு வருடத்தில் தேசிய அரசியல் களத்தில் பலவருட அனுபவமுள்ளவர்களை வென்றிருக்கிறார்.

வந்த புதிதில் சொந்த கட்சியினராலும் , எதிர்க் கட்சியினராலும் சுத்தமாக  அனுபவமற்றவர், அரசிலுக்கு லாயக்கற்றவர் என கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால்,  மீடியாக்கள் தந்த எதிர்மறை பிம்பத்தால் இன்று மக்களிடம் எளிதாக சென்று சேர்ந்துவிட்டார்.

இன்று டிரம்ப் குடியரசுக் கட்சியின் உள்கட்சி தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற தனி வேட்பாளராக வலம் வருகிறார்.  அதுபோல இவருக்கு எதிராக  போட்டியிட்ட எவரும் இன்று தேர்தல் களத்தில் இல்லை. எனவே  குடியரசுக் கட்சி கூடிய விரைவில் இவரை ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளராக அறிவிக்க உள்ளது.

அதனால், டெமாக்ரட்டிக் கட்சி அல்லது மக்களாட்சிக் கட்சி  சார்பாக போட்டியிடும் ஹில்லாரி கிளிண்டனை எதிர்த்து டிரம்ப் போட்டிவது உறுதியாகிவிட்டது. 

இந்தச் சூழலில் இரு கட்சிகளுக்கிடையே தேசிய அளவில் அரங்கேறவுள்ள  தனி மனிதத்தாக்குதல்கள், பேரங்கள், குற்றச்சாட்டுகள் என மிகப்பெரிய  தேர்தல் சூதாட்டத்துக்கு அமேரிக்கா தயாராகிவிட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாம் தமிழகத்துக்கு வருவோம். தமிழக ஊடகங்கள் தேவைக்கு அதிகமாக தேர்தலை பற்றி பேசிவிட்டன. "அண்ணன் வந்தால் தமிழ்நாடும் அமேரிக்கா"  என ஓரு படத்தில் ரஜினி பாடுவார் அதைத் தாண்டி இரண்டுக்கும் வேறு அரசியல் ஓற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலில் ஊழல் என்பதை தாண்டி நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்.

 கடந்த ஐம்பது வருடங்களாக ஆண்டுவரும் திராவிடக் கட்சிகளுக்கு தமிழகம் இந்த வருடதேர்தலில் ஓய்வு தருமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.

அப்புறம், தமிழகத்தில் இருப்பவர்கள் மே 16 அன்று தவறாமல் வாக்களியுங்கள். உங்களுக்கு யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லையெனில் நோட்டோவை அழுத்திவிட்டு வரவும். 

நமது குரல்  ஜனநாயகத்தில் ஓங்கி ஓலிக்க வாக்களியுங்கள் என நண்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!.


7 comments:

 1. அனைவரும் வாக்களிப்போம்
  தேர்தல் பணியாற்றுவதால் நான் ஏற்கனவே வாக்களித்து விட்டேன் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. மிக நல்லது. கடமை செல்வரான உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன ? :) வருகைக்கு நன்றி!!

   Delete
 2. அமெரிக்க மீடியாவும், அரசியல்வாதிகளும் ட்ரம்ப்பை ஜோக்கராகத்தான் நினைத்தார்கள். எல்லாம் செய்து பார்த்தார்கள் அவரை கவிழ்த்த. ஒண்ணும் ஆகல. ரொம்பப் படிக்காத வெள்ளைக் கார அமெரிக்கர்கள் எல்லாம் "கோபத்தில்" இருப்பதால் "ட்ரம்ப்"க்கு ஓட்டுப்போடுகிறார்கள் என்கிறார்கள்.

  எனி வே, என்னுடைய ஓட்டு ப்ரைமரி (போட்டாச்சு) மற்றும் நவம்பரில் ஹில்லரி க்ளிண்டனுக்குக்குத்தான். :)

  ட்ரம்ப் ப்ரசிடெண்ட் ஆனாருன்னா வேடிக்கையாக இருக்கும்! பார்க்கலாம். எனித்திங் பாஸிபிள்! :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக நன்றி. மிக சரியாக சொன்னிங்க. அரசியலில் எதுவும் நடக்கலாம்.

   பிரைமெரி முடிந்ததும் டிரம்பின் பேச்சில் உள்ள வணக்கத்தை கவனியுங்கள். இனிமேல் வாயிக்கு வந்ததை அவர் பேசப்போவதில்லை. :)

   Very Interesting..

   Delete
 3. நோட்டாவைப்பற்றி அறியாமல் நோட்டாவுக்கு போடுங்கள் என்று சொல்கிறீர்கள். நோட்டா என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்? அதை செல்லாத ஓட்டாகவே கருதுவார்கள் கணக்கெடுப்வர்கள். இதை மக்களின் எதிர்ப்பு என கருதினால் அதனால் பயனுண்டு. செல்லாத ஓட்டாக நேட்டோ ஓட்டுகளை எண்ணினால் நோட்டா ஓட்டு செய்பவனை மடையன் என்றுதானே கருத்தாக்கம் உண்டாகிறது. மற்றும், நோட்டாவில் ஓட்டு போட்டவனை தீவிரவாதியாக சந்தேகிக்கும் போக்கும் போலீஸிடம் இருக்கிறது என்று ஒரு போலீஸ் அதிகாரி வெளிப்படையாக சொன்னார். இது எதை காட்டுகிறது? தன்னை எதிர்க்கிறவனை இல்லாமல் செய்வதே சட்டம் இயற்றும் இந்த அரசியல்வாதிகளின் தந்திரம் என்பது மட்டும் விளங்குகிறது.

  ReplyDelete
 4. உங்கள் கருத்துக்கு நன்றி.

  எனக்கு இதில் மாறுபட்ட கருத்து உண்டு. நோட்டாவைப்பற்றி நடிகர் பார்த்திபனின் கருத்தை இங்கே பாருங்கள்.

  https://youtu.be/1QUgk8NXakk

  ReplyDelete
 5. பார்த்திபனின் கருத்து இது.
  //
  NOTA - என்பது ஒரு கட்சி அல்ல. அதற்கு கிட்டும் வாக்குகளை வைத்து அது ஆட்சி அமைக்க போவதும் இல்லை. ஆனால் அது நம் உண்மை உணர்வின் உன்னத வெளிபாடு ! கட்சிகளுக்கு கண்டபடி சின்னங்கள் உண்டு அவ்வோட்டு சீட்டில்.ஆனால் மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஒரே சின்னம் NOTA தான். அது ஆட்சி அமைக்காது. ஆனால் அதன் எண்ணிக்கை ஆட்சியாளர்களை அச்சுறுத்தும். அடுத்த கட்சிக்காரர்களை கவனமாக வேட்பாளர்களை தேர்வு செய்ய செய்யும். சுருக்கமாய் அது நம் சு'தந்திரச் சின்னம். யாரோ கொள்ளையடிப்பவர் ஆளட்டும் எனில் வெள்ளையனே ஆண்டிருக்கலாமே?
  நம்மவர், நம்மில் ஒருவர், நம் உணர்வை உணர்ந்த உயர்ந்த ஒரு நல்லவர் ஆளவே, அதில் நம் உரிமைகளை ( மருத்துவமும் கல்வியும் சமமாய் தரமாய் ) பெற்று வாழவே சுதந்திரம் பெற்றோம்.
  அது இன்று 10% நடந்தாலே 100% வெற்றி.
  அப்பனாகவோ, அண்ணனாகவோ, தம்பியாகவோ ஒரே குடும்பத்தில் இருந்தாலும் அவரவர் கருத்தை வெளியிடும் சுதந்திரம் நமக்கும் இருக்க வேண்டும்.
  நாம் வாக்களிப்பவர் வெற்றி பெற வேண்டுமே அன்றி யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்று ஊர் சொல்வதையோ கருத்துக்கணிப்பதையோ பார்த்து அவர்களுக்கே வாக்களிப்பதற்கு பதில் நம் வாயில் நாமே வாய்க்கரிசி போட்டுக்கொள்ளலாம்.
  புகைப்படத்தில் உள்ள சின்னத்தில் உள்ளது வலக்கையா? இடக்கையா? என்பதை உற்று கவனித்ததைப் போல, நமக்கு நம்பிக்கையான வேட்பாளர் இருக்கும் சின்னத்தில் அவர் எந்த கட்சியாக/சுயேட்சையாக நின்றாலும் அவரை
  (மிக மரியாதையாக) தேர்வு செய்வோம். அப்படி எவனும் (மரியாதை எதற்கு) இல்லையென்ற கோபத்தில் ஓட்டளிக்காமல் இருக்காமல்
  NOTA-வளிப்போம். இப்படி நான் பிரச்சாரம் செய்ய எவரும் எனக்கு கண்டெய்னரில் கரண்ஸி அனுப்பவில்லை என்பதை துணை ராணுவத்தின் துணையுடன் துணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.
  இன்றிரவு NEWS 7-ல் 9-10 'திக்கற்ற வாக்காளர்களுக்கு வக்காலத்து' வாங்கிகிறேன்.
  'அவசியம் பார்க்க வேண்டும்'என்ற அவசியமில்லை.
  பிற பிரச்சாரங்களால் மூளை tired ஆகியிருக்கும்.
  விரைவில் உறங்கி
  தமிழகத்தின் விடியலாய் எழுவோம்!//

  ReplyDelete