Wednesday, January 30, 2019

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் விருப்பம்

கடந்த டிசம்பரில் அமெரிக்காவின்  மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில்
ஒன்றான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்துக்குச்  சென்றிருந்தோம். (Princeton University). 1746 இல் எலிசபெத், நியூ ஜெர்சியில்  "நியூ ஜெர்சி கல்லூரி" என்ற பெயரில் செயல்படத் தொடங்கிய இந்தக் கல்லூரி இன்று பெருமைக்குரிய ஐவி லீக் பல்கலைக் கழங்களில் ஒன்றாகி இருக்கிறது.

தொன்மையான வரலாற்றைக் கொண்ட இந்தப் பல்கலைக் கழகத்தில்
பணியாற்றிய ஜாம்பாவன்களில் முக்கியமானவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அவர் தனது இறுதிகாலம் வரை பிரின்ஸ்டனில் தான் வசித்திருக்கிறார். 1935 இல் இருந்து 1955வரை அவர் வாழ்ந்த வீட்டை இன்னும் நம்மால் அங்கே பார்க்கமுடிகிறது.

ஆடம்பரமில்லாத எளியகட்டுமானமுள்ள மரவீடு  அது. ஐன்ஸ்டீன் தான் வாழ்ந்த காலத்தில் பல உலகத்தலைவர்களை இந்தவீட்டில் இருந்தே சந்தித்திருக்கிறார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு இந்திரா காந்தியுடன் ஐன்ஸ்டீனை  இந்த வீட்டில்  சந்திப்பது (1949) போலொரு புகைப்படம் கூட இணையத்தில் கிடைக்கிறது.

அவருடைய வீடு ஐன்ஸ்டீன் விரும்பியபடி  பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படவில்லை. அதுபோல அந்த வீட்டின் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு எந்த வரலாற்று அடையாளமும் அங்கே கிடையாது. மாறாக  கேட்டில் "தனியார் குடியிருப்பு" (private property) எனும் வாசகம் மட்டுமே நம்மை வரவேற்கிறது.   இருந்தாலும் வரலாற்றில்  முக்கியத்துவம் வாய்ந்த அந்த வீட்டை உலகம் முழுவதிலும் இருந்து தினமும்   பல ஆயிரம்பேர்  வெளியிலிருந்து  பார்த்துச் சென்றபடியிருக்கின்றனர்.

No comments:

Post a Comment