இதன் முந்தைய பதிவு இங்கே..
சூலை 7, ஞாயிற்றுக் கிழமை காலையில் கலந்துகொண்ட இரண்டாவது நிகழ்வு
2. ஆதிச்சநல்லூர், பொருந்தல், கீழடி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்வுச் சான்றுகளும் பழங்காலத் தமிழர் நாகரிகமும் - Dr. Mrs.S.Sridas
ஆய்வின் நோக்கம்- மேலே குறிப்பிடப்பட்டுள்ள அகழாய்வில் இருந்து பண்டைய தமிழர் நாகரிகத்தை பொருளாதாரம், சமூகம், அரசியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தல்
தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகம் குறித்து அறிய உதவும் மூன்று
முக்கிய தொல்லியல் களங்கள் குறித்து பேசினார்கள்.
1. ஆதிச்சநல்லூர்- இது தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ளது.
2. பொருந்தல்- இது கோயில் நகரமான பழனிக்கு தென்மேற்கே உள்ள சிறிய ஊர்.
3. கீழடி - மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில் இருக்கிறது. இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர்கலாச்சாரத்தை வெளிக்கொணர்கிறது. சிகாகோவில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் மையக்கருத்தே
” கீழடி நம் தாய் மடி” என்பதாகும்.
விழா அரங்கில் கீழடி தொன்மைக்கு வலு சேர்க்கும் வகையில் பல படிங்களையும், ஆவணங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். சில புகைப்படங்கள் இங்கே.
அமர்வில் பகிரப்பட்ட சில தகவல்கள் :
வாணிபத்தை உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபம் எனப் பிரித்து கி.மு 1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்போதைய முக்கியமான துறைமுகங்கள்- முசிறி, கொற்கை, பட்டினம் (மாமல்லபுரம்), காவிரிப்பூம்பட்டினம். அவற்றுக்கும் மேலை நாடுகளுக்கும் கடல் வழி இருந்த தொடர்புகள்.
பண்டைய புகழ்பெற்ற வணிக நகரங்கள் - காஞ்சி, கடல்மல்லை, அரிக்கமேடு, தகடூர், செங்கம், கொடுமணல்,மதுரை, அழகன்குளம்.
தொல்காப்பியர் காலத்திலேயே தமிழகத்தில் அடிமைகள் வாழ்ந்திருந்தார்கள் என்பது கேள்விப்படாத புதிய தகவலாக இருந்தது. அதற்குச் சங்ககால இலக்கியத்தரவுகளும் இருக்கிறதாம்.
இதற்கு ஆதிச்சநல்லூர் அகழ்வராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டவரின் மண்டைஓடு வலுசேர்க்கும் என நினைக்கிறேன்.
அதுபோல ஆதிச்சநல்லூர், பொருந்தல்
அகழ் ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட மக்கிய நெல்
ஆதாரம் இப்போது இந்திய வரலாற்றையே மாற்றி எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதுபோல மண்பாண்டங்களில் உள்ள பிராமி எழுத்துகள் தமிழின் தொன்மையைக் காட்டுகிறது.
மக்கள் வாழ்விடம் பற்றிய புரிதல்கள்
பொருந்தல் குறித்து..
"தமிழர் கலைகளில் ஒப்பனைக் கலை குறித்த ஓர் ஒப்பனை வடிவமைப்பாளரின் வாழ்வியல் அனுபவக் கட்டுரை " - அடுத்த பதிவில் (6)

No comments:
Post a Comment