ஏன் வாட்ஸ்அப் பற்றி அதிகம் எழுதுகிறீர்கள் என ஒரு நண்பர் உள்பெட்டியில் கேட்டார். காரணத்தை இங்கே சொல்லி விடுகிறேன்.
வாட்ஸ்-அப்பில் நான் கூடுதல் கவனம் செலுத்தக் காரணம் சமீபத்தில் நாங்கள் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு. ஆமாம், கடந்த ஆண்டு தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) தளத்தின் பயன்பாட்டினை மேம்படுத்தும் நோக்கிலும், தமிழ்ச்சரத்தின் ஊடாக தங்கள் வலைப்பூக்களுக்கான வாசகர்களின் வருகையை அதிகரிக்கும் நோக்கிலும் ஒரு கருத்துக்கணிப்பை ஏற்பாடு செய்திருந்தோம்.
அதில் ஒரு கேள்வி - "தமிழ்ச்சரத்தினைப் பற்றி எப்படி அறிந்து கொண்டீர்கள் ?" அதற்குப் பலர் (70% சதம்) "வாட்ஸ் அப்" எனச் சொல்லி இருந்தனர். ஆச்சர்யமாக இருந்தது. காரணம், தளம் பலரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக மார்க்கெட்டிங் நிபுணர் ஒருவருடைய
ஆலோசனைபடி பணம் செலவழித்து பேஸ்புக்கில் தான் விளம்பரம் செய்திருந்தோம். ஆனால், முடிவு வேறாக இருந்தது. வாட்ஸ்-அப் வழியாக பணம் செலவு செய்யாமல் நண்பர்கள் வழியாகவே செய்திப் பலரைச் சென்றடைந்திருக்கிறது.
வாட்ஸ் அப்-இன் வீச்சைத் தெரிந்து கொண்ட தருணம் அதுதான். இது ஒரு துல்லியமான அறிவியல் பூர்வமான ஆய்வு கிடையாது தான். ஆனால், பெரிய செலவோ, மார்கெட்டிங் தந்திரங்களோ இல்லாமல் வாய்வழிச் செய்தி போல தகவல்கள் இலவசமாக பலரைச் சென்றடைய எளிய வழி வாட்ஸ்-அப் என்பதை இங்கே பலர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இங்கே இதைப் பகிர்கிறேன்.
#வாட்ஸ்-அப்
No comments:
Post a Comment