"காசு பாத்து வளர்ந்த பசங்க படிக்காது. இந்த காலத்து பசங்களுக்கு அப்ப மாதிரி டிரைவே இல்ல.." என்றெல்லாம் யாராவது சொல்வதைக் கேட்கும் நேரத்தில் இது போன்ற சில விசயங்கள் கண்ணில்படுகிறது.
அது, திரைநடிகர் சின்னிஜெயந்தின் மகன் இந்திய ஆட்சித் துறை ( IAS) தேர்வெழுதி தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராகி இருக்கிறார் என்பதாகும்.
சமுதாயத்துக்குப் பங்களிப்பு தரும்படியான வேலையைத் தேடிக்கொள் என பெற்றோர்களாகிய நாம் என்னதான் சொன்னாலும், பிள்ளைகளுடைய வளரும் சூழல், நண்பர்கள், பழகும் மனிதர்களின் தாக்கம் என்பது மிக அதிகம்.
அந்த வகையில் , மகனிடம் உயரிய சிந்தனையை விதைத்து அதை வென்றெடுத்த சின்னிஜெயந்த்-தின் குடும்பம் பாராட்டுதலுக்கு உரியது.
படங்கள் நன்றி- ஆனந்தவிகடன்.
No comments:
Post a Comment