இணையபாதுகாப்பு அதிகாரி(Cyber Security Officer) வீட்டில் நடந்த ஒரு சம்பவம்:
அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தை சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு (National Cyber Security Awareness Month.) மாதமாக கொண்டாடுவதால், அது தொடர்பான பல கூட்டங்கள் இங்கு நடக்கின்றன.
அந்த வகையில், அமெரிக்காவின் மிகப் பெரிய சில்லரை வணிக நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருடைய அனுபவத்தைக் கேட்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. அது சைபர் விழிப்புணர்வு பற்றி இதுவரை நமக்கு இருந்த புரிதலுக்கு புரிய பரிமாணம் தருவதாக இருப்பதால் பகிர்கிறேன்.
இதுவரை, குறுஞ்செய்தி, இமெயில்களில் வரும் லிங்குகளைக் கவனமாக சொடுக்குங்கள். சந்தேகத்துக்கு இடமான தளங்களுக்கு போகாதீர்கள். கிரெடிக்ட் அட்டை பயன்பாடு, தனிமனித தகவல் பரிமாற்றத்தில் கவனம் தேவை என ஒரு மிகப்பெரிய பட்டியல் வைத்திருந்தோம். அதில் இன்னொரு விசயம்.
சமீபத்தில் மேற்சொன்ன நபருடைய வீட்டுக்கு ஒரு திருமண அழைப்பிதழ் வந்திருக்கிறது. பிரித்துப் பார்த்தால் ஆச்சர்யம். அதில் அவருக்குத் தெரிந்தவர்களுடைய பெயர் எதுவுமே இல்லை. ஆனால்,"கல்யாணத்தில் கலந்து கொள்ள இங்க போய் உங்க விருப்பத்தைச் சொல்லுங்க..." எனச் சொல்லி ஒரு இணையதள முகவரி ஒன்றைத் தந்திருக்கிறார்கள்.
உடனே உசாரான நபர் உள்ளே கொஞ்சம் உள்ளே இறங்கி பார்த்தபோது, அது ஒரு போலி அழைப்பிதழ் என்றும் அந்த இணைப்பின் வழியாக அவருடைய ஃபோன் அல்லது கணினியில் மால்வேர்(Malware) எனும் தீம்பொருளை நிறுவ திட்டமிட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. அவர் பாதுகாப்பு அதிகாரி என்பதால் உசாராகி விட்டார். ஆனால், பெரும்பாலான சாமானியர்கள் கவனக்குறைவாக ஆர்வத்தில் அந்தத் தளத்துக்கு போய் ஏமாந்திருப்பார்கள் என்பது என்னவோ உண்மை.
அங்க தொட்டு, இங்க தொட்டு எங்கே வந்திருக்கிறார்கள் பாருங்கள் ?. இப்படித்தான், பெரிய செப்படி வித்தைகள் ஏதுவும் இல்லாமல் நம்முடைய ஆர்வத்தை மட்டும் தூண்டும் விதத்தில் ஏதாவது ஒரு விசயத்தைச் செய்து நம்மை ஏமாளி ஆக்கி விடுகிறார்கள் கயவர்கள். இதைத் தான் சோசியல் இன்ஜினியரிங் என்கிறார்கள்.
இணையம் பெருகிய இன்றைய டிஜிட்டல் உலகில், அலுவலகம் என்றில்லை. பள்ளி,கல்லூரி, வீடு என எங்கும் அனைவருக்கும் இந்தப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அவசியமாகிறது. கவனமாயிருங்கள்.
முன்பே சொன்னது தான், போக போக வரும் நாட்களில் பாதுகாப்புக்காக தூங்கும் போது கூட ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டும் போல..
இணைய_வழி_பாதுகாப்பு
தொலைதூரத்தில் எவ்வாறு பாதுகாப்பாக வேலை செய்வது என்று உங்கள் ஊழியர்களுக்குக் கற்பிப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது
No comments:
Post a Comment