கடந்த ஒராண்டுகளுக்கு மேலாக சுமந்து திரிந்த ஒரு சுமையை இறக்கி வைத்திருக்கிறேன். ஆமாம், சமூக ஊடகங்கள் குறித்து எழுதிக் கொண்டிருந்த புத்தக வேலை இன்றோடு நிறைவு பெற்றது.
ஆரம்பத்தில் ஒரு புத்தகம் எனத் தொடங்கிய வேலை, எடிட்டரின் கைகளுக்குப் போனபோது இரட்டிப்பானது. முழுமையாகப் படித்த எடிட்டர் அதில் இரண்டு புத்தகங்களுக்கான உள்ளடக்கம் இருப்பதைக் கண்டு கொண்டதால், புத்தகத்தை இரண்டாக பிரித்து எழுதிவிட்டேன். இரட்டைப் பிள்ளைகள் ! :)
முதல் புத்தகத்தின் இறுதி பிழைத்திருத்தம் முடித்து பின்னட்டைக் குறிப்பையும் சேர்த்து பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன்.
பதிப்பகம் ? கடந்த முறை இர்மா(அந்த ஆறு நாட்கள்) நாவல்-ஐ வெளியிட்ட "ஜிரோ டிகிரி" தான் இந்த முறையும் வெளியிடுகிறது.
இது என்னுடைய முதல் புனைவில்லாத நூல் (non fiction) என்பதால் ஆரம்பத்தில் சற்று தயக்கம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால், அந்தச் சுவடே இல்லாமல் நூல் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக அந்த மூத்த எழுத்தாளர் சொன்ன போது கூடுதல் நம்பிக்கை வந்திருக்கிறது.
முதல் புத்தகம் சமூக ஊடகங்களைப் புரிந்துகொள்ளவும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவுகின்ற மிகச் சிறந்த கையேடாக இருக்கும்.
புத்தகத் தலைப்பு ? "சோசியல் மீடியா- இது நம்ம பேட்டை". தலைப்பே நல்ல ரகளையான வந்திருப்பதாக நினைக்கிறேன். இரண்டாவது புத்தகம் பற்றி வரும் நாட்களில் சொல்வேன்.
புத்தக விழா-வுக்குப் போகும் நண்பர்கள் ஒவ்வொரு முறையும் தங்களுக்குப் பிடித்தமானவர்களின் புதிய புத்தகங்களை வாங்கி வர வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இந்த முறை நான் கண்டிப்பாக நண்பர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வேன்.
தொடர்ந்து உற்சாகப்படுத்தி துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !
No comments:
Post a Comment