யூ-டியூபின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சித்ரா லட்சுமணன் திரைத்துறையோடு நின்றுவிடாமல் தற்போது "சோசியல் டாக்கீஸ் (Social Talkies)" என்ற பெயரில் மற்ற துறை ஆளுமைகளையும் சந்தித்து வருகிறார். நல்ல அவசியமானதொரு முன்னெடுப்பு .
கடந்தவாரம் எழுத்தாளர் தமிழ்வாணனின் மூத்த புதல்வர் லேனா தமிழ்வாணனை சித்ரா நேர்காணல் செய்திருந்தார். நிகழ்ச்சி வழக்கம் போல குழப்பங்கள் எதுவும் இல்லாமல் மிகக் கண்ணியமாகத் தெளிவாக இருந்தது. பல பயனுள்ள கேள்விகள். நிறைவாக இருந்தது. முக்கியமாக எழுத்துத் துறை பற்றியும், இணைய எழுத்து குறித்து லேனா மிகச் சரியாக அவதானித்து இருக்கிறார்.
அவருடைய பார்வையில், இன்று தமிழில் எழுத மிகச் சரியான களம் பிளாக் (blog) எனும் வலைத்தளத்தைக் குறிப்பிட்டார். ஏனோ சமூக ஊடகங்களைத் தவிர்த்து விட்டார். (நம்பிக்கை இல்லை ? ) . அவரைப் போல வலைத்தளங்களை விரும்பும் பலருக்கு தமிழ்ச்சரம் (Tamilcharam) எனும் வலைத்திரட்டி இருப்பது குறித்து தெரியுமா எனத் தெரியவில்லை. அவரைத் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் பயன்படும்.
இல்லை என்றால் விடுங்கள். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த பெட்னா நிகழ்ச்சியில் பார்த்துக் கொள்ளலாம். சிகாகோவில் கடந்த முறை சந்தித்தபோது அடுத்த முறை வர முயற்சி செய்கிறேன் எனச் சொல்லி இருக்கிறார்.
வாசிப்புப் பழக்கம் குறைந்திருக்கிறதா? என்ற கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்லி இருந்தார். நான் இரசித்த இன்னொரு விசயம் நிகழ்ச்சியின் இறுதியில் தன்னைப் போல தனக்குப் பிறகு தன்னுடைய வாரிசுகள் தனது எழுத்தையும் பதிப்பகத்தையும் ஏற்று நடத்த முடியாத சூழல் இருப்பதை மிக நேர்மையாக ஒத்துக்கொண்டது.
நிகழச்சிக்கான முகவரி:
முழு நேர்காணலையும் பார்க்கிறேன்
ReplyDeleteநன்றி நண்பரே
கேட்கவும் செய்யலாம். சுவாரஸ்மாகவே இருக்கும்.
Deleteலேனா தமிழ்வாணன் அளித்த நீண்டதொரு பேட்டியில் பயனுள்ள பல சுவையான தகவல்களை அறிய முடிந்தது.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி.
நேரம் இருந்தால் மற்ற எழுத்தாளர்கள் நேர்காணல்களையும் பாருங்கள்.இந்திரா செளந்தர்ராஜன் ஒருமுறை பேசினார்.
Delete