என்கிரிப்சன் (Encryption) எனும் மறையாக்கம் பற்றி ஒரு புத்தகம் எழுதும் ஆசையில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் அளவுக்கு தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தேன். பிறகு, ஏதோ காரணத்தால் தடம் மாறி சமூக ஊடகங்கள் பற்றி எழுதத் தொடங்கிவிட்டேன்.
சரி விசயத்துக்கு வருவோம். என்கிரிப்சன் குறித்த பழைய குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்த போது அது தொடர்பான தகவல் கிடைத்த ஒரு இடம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அது வாத்ஸ்யாயனரின் "காமசூத்திரம்".
அதில் பெண்கள் அறிந்திருக்க வேண்டிய 64 கலைகள் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. ஓவியம், சமையல், மசாஜ், வாசனை திரவியங்கள் தயாரித்தல் என நீளும் அந்தப் பட்டியலில் 45 வது இடத்தில் இருப்பது "மிலேசிடா-விகல்பா" (Mlechita-vikalpa)எனும் இரகசிய எழுதும் கலை. அதைப் பயன்படுத்தி பெண்கள் இரகசியமாக தங்களுடன் தொடர்புகள் இருப்பவர்களுடன் விவரமாக தகவல்களைப் பரிமாற சொல்லித் தருகிறார் வாத்ஸ்யாயனா.
அப்போது கண்ணில் பட்ட இன்னொரு விசயம் நந்தியின் காமசூத்திரம்.
சிவனும் பார்வதியும் காமத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது சிவனின் வாயிற்காப்போனாக இருந்த நந்தி அந்த உரையாடலைக் கேட்டு, காமம் குறித்து 1000 அத்தியாயங்கள் அடங்கிய காம சூத்திரத்தை எழுதியதாக ஒரு ஐதீகம் இருக்கிறதாம். வாத்ஸ்யாயனா அந்த நந்தியின் நூல் தான் தன்னுடைய காம சூத்திரத்தின் மூல நூல் என்றும், அதன் சிறு பகுதியே இது என்றும் கூட சொல்லி இருக்கிறாராம்.
ஓ.... காப்பிரைட் எனும் பதிப்புரிமை மீறல் விவகாரம் அன்றைக்கே தொடங்கிவிட்டதா சரிதான்... :)
No comments:
Post a Comment