Wednesday, January 26, 2022

கவிஞர் சிற்பி - வாழ்த்துகள் !!

இயற்கைக் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்துக்கு இன்று உயரிய பத்மஸ்ரீ விருது அறிவித்திருக்கிறார்கள்.



கவிஞர் சிற்பியின் தமிழ் கவிதைகளுடனான பயணம் என்பது மிக நீண்டது. 25-30 ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய பல கவிதைகள் கல்லூரி பாடத்திட்டங்களில் இருந்தன.

"மனிதனே இயற்கையின் ஒரு பகுதி என்பதால் இயற்கைக்கு நேரும் அழிவுகளில் நொந்து போவதும், எல்லா வகை அடக்கு முறைகளிலிருந்தும், சீரழிவுகளிலிருந்தும் மனிதனைக் காக்க முயல்வதும் என் கவிதைகளின் அடித்தளச் செயல்பாடு" எனச் சொன்னவர்.

அவருடைய கவிதைகள் இன்றைய இயற்கை ஆர்வலர்கள் பலரின் நெஞ்சில் அந்த விதையை ஆழ ஊன்றியது என்று கூட சொல்லலாம்.

பத்மஸ்ரீ விருது பெறும் கவிஞர் சிற்பி அவர்களுக்கு அன்பான வாழ்த்துகள் !

No comments:

Post a Comment