தமிழ்ச் சமூகத்தில் பலர் தன்னலம் இல்லாமல் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பரவலாக அறிமுகப்படுத்தும் விதமாக தமிழ்ச்சரத்தின் வழியாக "நட்புரையாடல்" என்ற ஒரு புதிய நிகழ்வை முன்னெடுக்கிறோம்.
இந்தத் தொடர் நிகழ்வின் முதல் நிகழ்ச்சியாக நான் வரும் சனிக்கிழமை (பிப்-12) நண்பர் பா.சதீஸ் முத்து கோபால்-ஐ சந்திக்கிறேன். இயற்கை, சுற்றுச்சூழல், கானுயிர் தொடர்பாகப் பல ஆண்டுகளாக பேசி, எழுதி வரும் சதீஸ் ஒரு நூலாசிரியரும் கூட. அவருடைய "யாருக்கானது பூமி ?" (அகநாழிகை வெளியீடு) எனும் கட்டுரைத் தொகுப்பு தமிழக அரசின் சிறந்த சுற்றுச் சூழல் விருதை (2015) பெற்றிருக்கிறது.
சதீஸ் தொழில் முறையில் ஒரு மென்பொருள் வல்லுநர். சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்த இவர் தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.
நண்பர்கள் பரவலாக நிகழ்வில் கலந்து கொள்ளும் நோக்கில் இதை ஃபேஸ்புக் நேரலையில் (Facebook Live) நடத்துகிறோம். வாய்ப்புள்ள நண்பர்கள் நேரலையில் கலந்து கொள்ளுங்கள். நிகழ்வின் இறுதியில் பார்வையாளர்கள் கேள்வி நேரமும் உண்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment