ஜெஸி (எ) ஜெஸிகா கிங் குறித்து முகநூல் நண்பர் சரவணன் மாணிக்க வாசகம் அவர்களின் பதிவு..
Saturday, March 25, 2023
ஜெஸிகா கிங் - குறித்து (6) - அமெரிக்கச் சித்திரம் அழகாக வந்திருக்கிறது
Tuesday, March 21, 2023
மனிதத்தின் மகத்தான உச்சங்கள்
1994-இல் ஏ.ஆர்.ரகுமான்
ஒரு பாட்டோ அல்லது இசைத்துணுக்கோ நேரடியாக எப்படி உருவாகிறது என்பதை என்னைப் போல நீங்களும் அறிய ஆர்வம் கொண்டவர் என்றால் இணைப்பில் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் காணொளியைத் தவறாமல் பாருங்கள்.
அது ஏ.ஆர்.ரகுமான் சன் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிக்காக பிரத்தியோகமாக ஒரு இசைத்துணுக்கை இசைக்கும் நிகழ்ச்சி. அது நிகழ்ந்தது 1993 அல்லது 94 ஆக இருக்கும் என நினைக்கிறேன். இலங்கை வானொலி புகழ் பி.எச். அப்துல் ஹமீதின் ஒருங்கிணைப்பில் அந்த நிகழ்ச்சி மிக அருமையாக வந்திருந்தது.
நிகழ்வில் கல்யாண வீடுகளில் அனைவரும் எளிதாக கடந்து போகும் நாதஸ்வர இசை ரகுமானின் கைவண்ணத்தில் ரசிக்கும்படியான டிஜிட்டல் வடிவம் பெறுவதைப் பாருங்கள். பதின்ம வயதில் தொலைத்தொடர்புகள் அதிகம் இல்லாத அந்த நாடகளில் சன் டிவியில் ஒளிபரப்பானபோது வீட்டில் கறுப்பு வெள்ளையில் பார்த்து வியந்திருக்கிறேன்.
அப்படியே அந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஏ.ஆர்.ரகுமான் குறித்து பாடகர் எஸ்பிபியும், கவிஞர் வைரமுத்துவும் பகிரும் கருத்துகளையும் பார்க்கத் தவறவிடாதீர்கள்.. குறிப்பாக, மறைந்த எஸ்.பி.பியின் குரலில் எத்தனை ஆத்மார்த்தம். எஸ்.பி.பி…நீர் மனிதன் !
Sunday, March 19, 2023
வனநாயகன் குறித்து-27 (நீங்களும் மலேசியாவிற்குச் செல்லவேண்டுமா ?)
'உர்ராங்ஊத்தான்' எனும் நமது மூதாதையரான குரங்கு பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கை உடைந்த நிலையிலும் சாரா போலீஸ் ஆபீசரிடம், என்னோட குறிக்கோள் சிம்பிள் அங்கிள். மார்டின் லூதர் கிங் சொன்னதுதான். *ஓடமுடியலையா? நட. நடக்கவும் முடியலையா? தவழு. இப்படி ஏதோ ஒருவகையில் நாம முன்னேறிக்கொண்டிருக்கனும்னு* சொல்லும்போது சோர்வடையும் மானுடசமூகத்திற்கு நாவலின் மூலம் ஆசிரியர் சொல்ல முயலும் செய்தி புலனாகிறது.
புத்தகத்தை வாங்க