Tuesday, March 21, 2023

1994-இல் ஏ.ஆர்.ரகுமான்

ஒரு பாட்டோ அல்லது இசைத்துணுக்கோ நேரடியாக எப்படி உருவாகிறது என்பதை என்னைப் போல நீங்களும் அறிய ஆர்வம் கொண்டவர் என்றால் இணைப்பில் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் காணொளியைத் தவறாமல் பாருங்கள்.

அது ஏ.ஆர்.ரகுமான் சன் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிக்காக பிரத்தியோகமாக ஒரு இசைத்துணுக்கை இசைக்கும் நிகழ்ச்சி. அது நிகழ்ந்தது 1993  அல்லது 94 ஆக இருக்கும் என நினைக்கிறேன். இலங்கை வானொலி புகழ் பி.எச். அப்துல் ஹமீதின் ஒருங்கிணைப்பில் அந்த நிகழ்ச்சி மிக அருமையாக வந்திருந்தது. 

நிகழ்வில் கல்யாண வீடுகளில் அனைவரும் எளிதாக கடந்து போகும் நாதஸ்வர இசை ரகுமானின் கைவண்ணத்தில் ரசிக்கும்படியான டிஜிட்டல் வடிவம் பெறுவதைப் பாருங்கள். பதின்ம வயதில் தொலைத்தொடர்புகள் அதிகம் இல்லாத அந்த நாடகளில் சன் டிவியில் ஒளிபரப்பானபோது வீட்டில் கறுப்பு வெள்ளையில் பார்த்து வியந்திருக்கிறேன்.

அப்படியே அந்த நிகழ்ச்சியின் இறுதியில்  ஏ.ஆர்.ரகுமான் குறித்து பாடகர் எஸ்பிபியும், கவிஞர் வைரமுத்துவும் பகிரும் கருத்துகளையும் பார்க்கத் தவறவிடாதீர்கள்.. குறிப்பாக, மறைந்த எஸ்.பி.பியின் குரலில் எத்தனை ஆத்மார்த்தம். எஸ்.பி.பி…நீர் மனிதன் ! 



ஓ.. அந்த நிகழ்ச்சின் இறுதியில் அப்துல் ஹமீதின் மடியில் ஓடி வந்து அமரும் அந்தச் சிறுவன் யார் எனத் தெரிகிறதா ? அவர்தான் ஏ்ஆர். ரகுமானின் அக்கா மகன். ஜி. வி. பிரகாஷ். ‘வெயில்’படத்தில் இசையமைப்பாளரானவர். காலம்தான் எவ்வளவு வேகமாக ஒடிவிடுகிறது...

youtube.com

No comments:

Post a Comment