
கதையின் சாரம் இதுதான். கதையின் தொடக்கத்தில் ஒருவன் மர்மான முறையில் மரணமடைகிறான். அந்த மரணத்துக்கு பின் அவனுடன் நெருங்கிப்பழகிய காதலி, அவனுடைய நெருக்கமான நண்பர்கள் ஒரிருவர் அவனைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதுபோல் கதை நகர்த்தியிருக்கிறார்.
கதை, அவர்களின் கண்ணோட்டத்தில் நகர்ந்தாலும், மற்றவர்களின் அனுபவங்கள் வாயிலாக இறந்தவனைப் பற்றிய
ஒரு பிம்பம் மெள்ள வாசிப்பவர்களுக்கு துலக்கம் பெறுகிறது.
கதையில் எல்லோருடைய கண்ணோட்டமும் முக்கியத்துவம் தரப்பட்டு, அவர்களுடைய மனநிலை விவரிக்கப்பட்டு
கதையின் இறுதியில் மரணத்துக்கான மர்மமுடிச்சு
அவிழ்க்கப்படுகிறது.
எழுத்தாளர் ஜோன்ஸ் சுவீடனின் முக்கிய எழுத்தாளராக இருந்தாலும் நாவலின் மூலம் ஆங்கிலம் இல்லையென்பதாலோ என்னவோ, கதையும் கதைமாந்தர்களோ மனத்துக்கு நெருக்கமாக தோன்றவில்லை. வேண்டுமானால் கதையின் யுத்தியை அறிந்துகொள்ள வாசிக்கலாம். மற்றபடி பிரமாதமில்லை.
#Everything_Idon't_Remember
நன்றி நண்பரே
ReplyDelete