பொதுவாக வீடுகளில் ' விளக்கை அல்லது தீபத்தை அணைத்து விடு' எனச்சொல்வதை அபசகுனமாக நினைப்பார்கள். அதற்கு பதிலாக 'விளக்கைக் கையமத்தி விடு ' இல்லை 'விளக்கைக் குளிர வைத்துவிடு ' இப்படி ஏதோ ஒன்றைக் குறிப்பாக சொல்லி உணர்த்துவார்கள்.
இப்படி அபசகுனமான விசயங்களை நல்ல வார்த்தைகளால் சொல்வதைத் தமிழில் "மங்கலம்" என்பார்கள். (சகுனத்திற்கு எதிர்மறை "அபசகுனம்", மங்கலம் X "அமங்கலம்" )
இதுபோல நம்மில் பல மங்கலங்கள் நாட்டில் இருக்கின்றன. ஆடிமாதத்தில் பெண்கள் தாலிக் கயிற்றை மாற்றிவிட்டு புதிய தாலி அணிந்து கொள்ளும் சடங்கை 'தாலிப் பெருக்கு' என்பார்கள்.
அதுபோல ஒருவருடைய மரணத்தைப் பற்றிச் சொல்லும் போதுகூட
'காலமானார்', 'இயற்கை எய்தினார்', 'இறைவனடிச் சேர்ந்தார்', 'மீளாத்துயில் அடைந்தார்' எனச் சொல்வதும் மரபே.
நச்சுள்ள நாகப்பாம்பையே "நல்லபாம்பு" எனச் சொல்லும் நாம்தான், நெருப்புனா வாய் சுட்டற போகுதா ? என்றும் கேட்கிறோம். :)
குறிப்பு- மங்களம் வட சொல். மங்கலம் தமிழ்ச் சொல்.
it appears, u know neither tamilsol, nor vadasol.
ReplyDeleteநல்லது.
Deleteவிளக்கம் நன்று...
ReplyDeleteநன்றி நண்பரே !!
Deleteஉண்மை தான்! இப்படி பல சொற்கள்
ReplyDeleteவருகைக்கும், கருத்துரைத்தமைக்கும் நன்றி ஐயா.
Deleteஇல்லை. இதற்கு 'மங்கலம்' என்ற பெயர் கிடையாது. இது இடக்கரடக்கல். அதாவது அவையில் கூறத்தகாத சொற்களை வேறு சொற்களால் கூறுவது. (உதாரணம், ஒன்றுக்குப் போய்வந்தான், கால் கழுவி வந்தான் போன்று)
ReplyDeleteஅரசன், மானியமாக ஒரு ஊரை வழங்கினால் (அதற்கு அர்த்தம் அங்கு வீடுகட்டி குடிவரலாம்), அந்த இடம் 'மங்கலம்' என்று முடிவடையும். சதுர்வேதி மங்கலம், வடபாதி மங்கலம் போன்று.
நெல்லை தமிழரே, இரண்டும் வேறு வேறு என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteசபையில் நாகரீகம் கருதி சொல்லாதவற்றை தான் "இடக்கரடக்கல்" என்போம்.
அது ஊர் பெயருக்குமட்டும் அல்ல. "மங்கலம் உண்டாகட்டும்" எனச் சொல்வது இல்லையா ?
மங்களம் , மங்கலம்
ReplyDeleteவித்தியாசத்தை அறிந்தேன நண்பரே
நன்றி
பெயர் வரும்போது மங்களம் என்றும் வினைச் சொல்லாக வரும்போது மங்கலம் என்றும் வரும் போல ....
ReplyDelete