டீசல் விலை உயர்வு, பராமரிப்புச் செலவு எனப் பல காரணங்களைச் சொல்லி அரசு பேருந்துக் கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது. அதைக் கண்டித்து தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடப்பதாக அறிகிறேன்.
அதுகுறித்து..
கடந்த டிசம்பரில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு பல கோடிகள் (தொகை சரியாக நினைவில் இல்லை) நட்டம் என்ற தகவலை செய்தித்தாளில் வாசித்தேன். அன்று மாலையே எனக்கு சென்னையில் அரசு பேருந்தில் போகக் கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
அன்று பேருந்தில் அதிகக் கூட்டம் இல்லை. பின் சீட்டில் அமர்ந்திருந்த
நடத்துனர் சுறுசுறுப்பான இளைஞராக தெரிந்தார். சொந்த ஊர் மதுரை பக்கம் என அறிமுகம் செய்துகொண்டார். அவரிடம் பேச்சு கொடுத்தபடி நட்டக் கணக்குப் பற்றி விசாரித்தேன். அவர் சொன்னக் காரணங்கள் அரசாங்கம் சொல்வது போல் இல்லாமல் வேறு மாதிரியாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை
*துறையின் உயர் அதிகாரிகள் பொருத்தமில்லாமல் அதிக சம்பளம் பெறுகிறார்கள்
*துறையில் ஊழல் மலிந்திருக்கிறது. (எ.கா) பேருந்துகளுக்கு போடப்படுவ
தாகச் சொல்லப்படும் டீசல் போன்ற எரிபொருள்களின் கணிசமான அளவு வேறெங்கோ மடை மாற்றப்படுகிறது.
*பேருந்துகளின் பராமரிப்பைத் திட்டமிட்டு நிராகரித்து, அதன் ஆயுளைக் குறைக்கிறார்கள். அதன் மூலம் புதிய பேருந்துகள் வாங்குவதை
மறைமுகமாக ஊக்குவித்து அதிலும் வருமானம் பார்க்கிறார்கள்.
*இது பேருந்துகளை தனியார் மயமாக்கும் ஒரு முயற்சி
இப்படி பல காரணங்களை அடுக்கியவர் , கடைசியாக ' ஊரூ பூரா ஓடுற ஷேர் ஆட்டோ, கேப்ல பாதி யாரோடதுன்னு நீங்க நினைக்கிறீங்க ??' என
அதிரடியாக என்னைக் கேட்டு முடித்துக் கொண்டார்.
இப்படி அரசுத் துறை என்றால் மெத்தனம், நிர்வாகத் திறமையின்மை, சீர்கேடு எனும் நிலை முற்றிலுமாக மாறினால் கட்டணஉயர்வில்லாமல் துறையை சிறப்பாக நடத்த வாய்ப்பிருக்கிறது ?
#தமிழ்நாடு2017
லஞ்சமும் அதைத்தொடர்ந்த நிர்வாகச் சீர்கேடுகளும்தான் அரசு நிறுவனங்கள் அனைத்தின் சாபக்கேடு.
ReplyDeleteகாலப்போக்கில் மாறும் என நம்புவோம்.
Delete