Monday, June 24, 2019

பெயரில் என்னதான் இல்லை ?

அமெரிக்காவில் இருந்து  'ஆரூர் பாஸ்கர்' எனும் பெயரில் ஏன்  எழுதுகிறீர்கள்.
ஆரூர் பாஸ்கர் பெயர் எப்படி வந்தது ?  ஆரூர் சொந்த ஊரா ?
அரூரா இல்லை ஆரூரா ? அது  எங்கே சார் இருக்குது, கேரளா பக்கமா ? என்றெல்லாம் பலர் விசாரிக்கும் போது எழுத்தாளர் சுஜாதா  தற்செயலாகப் பெயர் மாறுவதைப் பற்றி எழுதிய ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

பாடகி மால்குடி சுபாவைத் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் "மால்குடி பெயர் எப்படி வந்தது ? சொந்த ஊரா ?"  என்று பேட்டியாளர் கேட்டபோது, "நான் 'மால்காடி'  (சரக்கு வண்டி) என்கிற ஒரு இந்தி நாட்டுப்பாட்டில் பிரபலமானேன். அங்கே என்னை 'மால்காடி சுபா' என்றே அழைத்தனர். வால்பாறை, வட்டப்பாறை மூலம் தமிழுக்கு அறிமுகமானபோது, மால்காடியை 'மால்குடி' என்று மாற்றிவிட்டார்கள். பின்பு அதுவே நிலைத்துவிட்டது" என்றாராம்.

அது போல நண்பர்கள் யாரும் எனக்கு பெயர் மாற்றம் செய்துவிடாதீர்கள்.
ஆரூர் பாஸ்கரில் இருக்கும் 'ஆரூர்'  வரலாற்றுத் தொன்மை வாய்ந்த திருவாரூரைக் (திரு+ஆரூர்) குறிக்கும்.  தஞ்சாவூரை அடுத்த திருவாரூர்
என் சொந்த ஊர் (பிறந்த ஊர் அல்ல) . தேவாரப் பாடல்களில் கூட திருவாரூர்  ஆரூர் ("ஆரூரானை மறக்கலுமாமே.." ) என்றும் திருவாசகத்தில் "ஆரூர் அமர்ந்த அரசே போற்றி"   என்றும் குறிப்பிடப்படுகிறது.  அதனால்,  அதை மாற்றிக்கொள்ளும்  எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை. :)

6 comments:

  1. ஆரூர் னு ஒரு ஊர் இருக்குனாதான் நான் நினைத்தேன். நீங்க சொன்ன பிறகுதான் திருவாரூர்க்காரர் நீங்கனு தெரிய வருகிறது..
    ஆரூர் மூனா னு ஒரு பதிவர் எழுதுவாரு.

    http://www.arurmuna.com/

    அவர் எந்த ஆரூர்னு தெரியலை..

    அதாவது பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாதுனு சொல்லுவாங்க. பேரை வைத்து ஒருவரை ஸ்பாட் பண்றதைவிட ஊரை வைத்து ஸ்பாட் பண்றது எளிது.

    பொதுவாக தமிழர்கள், தந்தை பெயரை சேர்ப்பதுடன் நிறுத்திக்குவாங்க. ஊரைச் சேர்த்து சொல்வதில்லை. பெரியார் ஈரோடை சேர்த்துக் கொண்டார். ஒருவேளை அவர் கன்னடா/தெலுகு ஆரிஜின் என்பதால் இருக்கலாம். ஒரு சிலர் சாதியைச் சேர்த்துக்கிறாங்க, அமெரிக்கா வந்தபிறகு --- ஐயர், --- அயங்கார், -- நாடார், --- தேவர், ---கவுண்டர் என்பதெல்லாம். ஒரு சிலர் அப்பா பேரில் சாதி ஒட்டி இருப்பதால் அவர்கள் சாதியும் தெரிய வருகிறது.

    ஏதாவது ஒரு தனிப்பட்ட ஐடென்டிட்டி தேவைப் படுகிறது. ஆரூர் பாஸ்கர் உங்க ஐடென்டிட்டி னு எடுத்துக் கொள்வதுண்டு..

    ReplyDelete
    Replies
    1. பெயருக்கு பின் சாதி சேர்த்துக் கொள்வது நம்மை 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கும் செயல் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதுவும் வெளிநாட்டினருக்கு நமது அடையாளம் இந்தியர்கள் என்றானபின் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதியை உயர்த்திப் பிடித்து என்ன செய்வார்களோ தெரியலை..

      Delete
  2. ஒரு சிலர் மண் பெருமை, ஊர்ப் பெருமை, தமிழன்னு பெருமை, சாதிப் பெருமைனு ஏதாவது ஒரு பெருமை பேசுறாங்க.. To me what matter is WHO YOU ARE! You are the only one who is responsible for your actions. Not your mom and dad, not your town, not the language you speak. It comes down to "who you are".

    ReplyDelete
    Replies
    1. //Not your mom and dad, not your town, not the language you speak. It comes down to "who you are// more or less this
      is reminding me the "American dream"

      Delete
  3. பெயரினை மாற்றம் செய்ய வேண்டாம்
    ஆருர் பாஸ்கர் என்பதே தொடரட்டும், நிலைக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி, கண்டிப்பாக நண்பரே

      Delete