எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கொஞ்சம் வெளிப்படையான மனிதர். மனதில் தோன்றுவதைச் சட்டென சொல்லக் கூடியவர். ஒருமுறை கவிஞர்களுக்கும் , எழுத்தாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. என்ன ?... இரண்டாவது கொஞ்சம் 'லேபர் இன்டென்சிவ்' என்று சொல்லிவிட்டு எளிதாகக் கடந்து சென்றவர்.
அதுபோல அவர் எல்லா படைப்புகளுக்கும் நற்சான்று கொடுத்துவிடுபவரும் அல்ல. தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத கறார் பேர்வழியான அவர் கடந்த ஆண்டு ஜி. கார்ல் மார்க்ஸின் "ராக்கெட் தாதா" நூலை வெளியிட்டு பேசும் போது ஒரு விசயத்தைக் குறிப்பிட்டார். அதாவது, இந்த நூலின் எழுத்தாளரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. முன் அறிமுகம் எதுவுமில்லை. ஆனால், நல்ல படைப்பாளர் என்பதால் ஊரில் இருந்து சென்னைக்கு வந்து வாழ்த்துகிறேன் எனச் சொல்லி இருந்தார்.
நாஞ்சில் நாடனைக் கவர்ந்த எழுத்து எனும் காரணத்துக்காகவே நான் அந்த நூலை கிண்டிலில் தேடிப்பிடித்து வாங்கி வாசித்தேன். எழுத்தாளர் ஏமாற்றவில்லை. ஆமாம், ஆசிரியர் சொற்சிக்கனத்தோடு காத்திரமாகக் கதை சொல்லும் நேர்த்தி தெரிந்தவர். உதாரணமாக ராக்கெட் தாதா எனும் அந்தக் கதையே ஒரு திரைப்படத்துக்கான, நெடுங்கதைக்கான பரப்பியல் கொண்டது. ஆனால், அதை மிக அழகாக ஒரு சிறுகதைக்குள் அடக்கியிருக்கிறார். செறிவான எழுத்து.
தொகுப்பில் தொத்தமாக பதினோரு கதைகள். ஆணோ, பெண்ணோ வாசிப்பவர்கள் எளிதில் தொடர்புபடுத்தக் கூடிய பல பாத்திரங்கள். அதில் காஃபி ஷாப் எனும் பகடி-கதையும் அடக்கம். சில கதைகள் 1980களில் நடப்பதுபோலத் தோன்றுகிறது. அதுபோல, தொகுப்பின் கடைசி கதை எத்தனைப் பேருக்குப் புரியும் எனத் தெரியவில்லை. மற்றபடி வாசிக்கலாம்.

நூல் : ராக்கெட் தாதா
ஆசிரியர்: ஜி.கார்ல் மார்க்ஸ்
விலை: ₹190
ISBN: 9789387333543
வெளியீடு: எதிர் வெளியீடு
வகை: சிறுகதைகள் / குறுங்கதைகள்
நல்லதொரு விமர்சனம்...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி !!
Deleteஅருமையான விமர்சனம்
ReplyDeleteகரந்தையாரே, எழுத்தாளர் காரல் மார்க்ஸ்-சின் சொந்த ஊர் கும்பகோணம் என்றே நினைக்கிறேன்.
Delete